பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 இழையினையும் குழையினையும் மாலையினையும் அணிந்து முன் கையில் தொடியினைச் செறித்து, மணி மாலை கிடந்து விளங்கும் மார்பும், வண்டு மொய்க்கும் கூந்தலும் உடைய பாடல் மகளிர், நரப்புத் தொடை யினையுடைய பேரியாழின்கண் பாலைப் பண்ணையமைத்து உழிஞை வெற்றியை உளம் உவந்து பாடுகின்றனர்: இழையர் குழையர் நறுந்தண் மாலையர் சுடர்கிமி ரவிர்தொடி செறித்த முன்கைத் திறல்விடு திருமணி யிலங்கு மார்பின் வண்டுபடு கூந்தன் முடிபுனை மகளிர் தொடைபடு பேரியாழ் பாலை பண்ணிப் பணியா மரபின் உழிஞை பாட.' காக்கைபாடினியார் நச்செள்ளையார் தழிஞ்சித் துறையைப் பாலைப் பண்ணமைத்துப் புகழ்ந்து பாடும் பாணரைக் குறிப்பிட்டுள்ளார். பாணர் கையில் பேரியாழ் உளது. தாழக் கட்டிய நரம்பினையுடைய அப்பேரியாழைக் கண்ட அளவிலேயே கைவிரலால் வாசிக்க வேண்டும் என்னும் வேட்கை தோன்றுகின்றது. பேரியாழில் பாலைப் பண் எழுப்பப்படுகின்றது. குரல் என்னும் நரம்பொடு புணர்த்த இனிய இசையில் தழிஞ்சி யென்னும் புறத்துறைப் பொருளாக அமைந்த பாட்டினைப் பாணர்கள் பாடு கின்றனர்: Af பாணர் கையது பணிதொடை நரம்பின் விரல்கவர் பேரியாழ் பாலை பண்ணிக் குரல்புணர் இன்னிசைத் தழிஞ்சி பாடி.." . ஏழாம் பத்திலும் பாலை யாழே பேசப்படுகின்றது. இனிய இசை தொடுத்தலையுடைய நரம்பினால் அமைந்த பாலை யாழை இயக்குதலில் வல்லவனொருவன் அழுகைச் சுவைக்குரிய உறுப்பினையுடைய பாலைப்பண்கள் எல்லா 101. பதிற்றுப்பத்து; 6 5; : 1.6. 102. பதிற்றுப்பத்து; 6, 7 : 7.9.