பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 வற்றையும் ஒவ்வொன்றாக மாறிமாறி யிசைத்தாற்போலச் சேறுண்டு பண்ணும் மழைபோலக் களிப்பு மிகுவிக்கும் கள் செல்வக் கடுங்கோ வாழியாதனால் இரவலர்க்கு இனிதே வழங்கப்படுகின்றது என்பதனைக் கபிலர் குறிப் பிட்டுள்ளார்: தீந்தொடை நரம்பின் பாலை வல்லோன் பையு ளுறுப்பிற் பண்ணுப் பெயர்ந்தாங்குச் சேறு செய் மாரியி னளிக்கும் கின் சாறுபடு திருவி னனைமகி ழானே. " கபிலரின் பிறிதொரு பாடலிலும் பாலைப் பண்ணைப் பற்றிய செய்தியினையே காண்கிறோம். வளைந்த கரிய தண்டினையுடைய, இனிய இசைக்குரிய நரம்புகளால் நிறைந்த, இசையின்பத்திற்கு இடமாகவுள்ள பேரியாழிடத்தே பாலைப்பண்ணை யெழுப்பிச் செல்வக் கடுங்கோ வாழியாதனை நினைந்து பரிசில் நோக்கோடு முதுவாய் இரவலன் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்: வாங்கிரு மருப்பிற் நீந்தொடை பழுரிைய இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணிப் படர்ந்தனை செல்லு முதுவா யிரவல.' இவ்வாறு இசைபற்றிய குறிப்புகள் வருமிடங்களில் பெரும்பகுதியும் பாலைப்பண்ணே குறிக்கப் பெற்றிருத்தல் ஈண்டு நோக்கற்குரியதாகும். துணங்கைக் கூத்து இதுகாறும் இசைபற்றிக் கண்டோம். முத்தமிழின் பிறிதொரு பகுதியான கூத்து குறித்துப் பதிற்றுப்பத்தில் அமைந்துள்ள குறிப்புகளைக் காண்போம். துணங்கைக் கூத்தைப் பற்றிய செய்திகள் ஐந்து பாடல்களில் 103. பதிற்றுப்பத்து: 7, 5 : 14.17. 104. பதிற்றுப்பத்து: 7, 6 : 1.3.