பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரங்ாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள் 1. பதிற்றுப்பத்து காட்டும் சேர மன்னர்கள் அரசியல் வரலாறு சேர வேந்தரின் பழமை கிறித்துநாதர் பிறப்பதற்கு முன்னமேயே தமிழகம் சிறந்த வரலாற்றுப் பின்னணியினைக் கொண்டதாக இலங்கியது. தமிழ்மக்கள் திருந்திய வாழ்க்கையினையும் செம்மை சான்ற இலக்கியச் செல்வத்தினையும் உடையவர் களாயிருந்தனர். வரலாற்றுப் பழமை நிறைந்த அந்நாட் களில் இவ் இந்தியப் பெருநாட்டில் பல நாடுகள் (ராஜ்யங்கள்) அமைந்திருந்தன. தென்னாட்டில் புகழ் பூத்து விளங்கிய நாடுகளில் சேர சோழ பாண்டிய நாடுகள் தலைசிறந்தனவாம். இக்கருத்தினை உள்ளிட்டே, வழங்குவது உள்வீழ்ந்த கண்ணும் பழங்குடி பண்பின் தலைப்பிரிதல் இன்று' என்ற குறளுக்கு உரை கூறுமிடத்துப் பரிமேலழகர் படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வருங்குடிகள் இம்மூவேந்தரும் என்று கூறிப் போந்தார். தொல்லாசி ரியராம் தொல்காப்பியனாரும், வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்’ என்று வடவேங்கடம் தென்குமரிக்கு இடையில் வழங்கும் பகுதியினைத் தமிழகம் என்றும், இந்நிலப்பகுதி கொடை 1. திருக்குறள்; குடிமை : 5. 2. தொல்காப்பியம்; பொருளதிகாரம்: செய்யுளியல், 79. சே. செ. இ.2