பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 வந்துள்ளன. துணங்கை என்பது மகளிர் கைபிணைத் தாடும் ஆடல் என்று அடியார்க்குநல்லார் குறிப்பிடுவர். இளைய மகளிர் கூடி ஒலி மிக்க துணங்கைக் கூத்தயர்வர். அப்போது அவர்கள் அணிந்துள்ள தழை யுடையினின்றும் உதிர்ந்த ஆம்பற்பூவினை வளைந்த தலையையுடைய முதிய பசுக்கள் மேய்கின்ற இடங்களாக அவர்கள் துணங்கைக் கூத்தயர்ந்த இடங்கள் ஆயின என்று குமட்டுர்க் கண்ணனார் குறிப்பிட்டுள்ளார்: கலிகெழு துணங்கை யாடிய மருங்கின் வளைதலை மூதா வாம்ப லார்கவும்." அரண்களின் கதவுகளைக் காக்கும் வன்மை மிகுந்த கணைய மரத்தை யொக்கும் பகைவர் நாடுகளைப் போரிலே பெறும் வலியமைந்த திண்ணிய தோள்களை உயரத் தூக்கி வீசி, பிணங்கள் குவிந்து உயர்ந்து கிடக்கும் போர்க்களத்திலே முன்னே பல காலங்களிற் பன்முறை துணங்கைக் கூத்தைச் சேரன் செங்குட்டுவன் நிகழ்த்தினான் என்று பரணரால் குறிப்பிடப் பெறுகின்றான்: நாடுகெழு தாயத்து நனந்தலை யருப்பத்துக் கதவங் காக்குங் கணையெழு வன்ன நிலம்பெறு திணிதோ ளுயர வோச்சிப் பிணம் பிறங் கழுவத்துத் துணங்கை யாடி.." ஆறாம்பத்தில் காக்கைபாடினியார் நச்செள்ளையார் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே ஏற்பட்ட ஊடலை விளக்குமுகத் தான் ஊடல் தோன்றியதற்குரிய காரணமே துணங்கைக் கூத்தால் வந்த வினையென்று குறிப்பிட்டுள்ளார். ஒளிர்கின்ற கால் விளக்கின் திரு விளங்கும் ஒளியிலே முழவு முழங்க ஆடும் துணங்கைக் கூத்தின்கண் கைபிணைந் 105. பதிற்றுப்பத்து: 2; 3 : 5–6. - 106. பதிற்றுப்பத்து: 5; 2 : 9-12.