பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 தாடும் மகளிர்க்குக் கைகோத்துக் கொள்ளும் புணையாகச் சிலைத்தலையுடைய வலிய ஏற்றினைப் போல முதற்கை கொடுத்து ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் செறிந்து சென்றமையால் அவன் கோப்பெருந்தேவி அவன்பால் ஊடல் கொண்டாள் என்ற செய்தி நாடகப் பாங்கிலே காக்கைபாடினியார் நச்செள்ளையாரால் நன்கு விளக்கப் பெற்றிருக்கக் காணலாம். அப்பாடற் பகுதி வருமாறு: சுடரும் பாண்டிற் றிருநாறு விளக்கத்து முழாவுமிழ் துணங்கைக்குத் தழுஉப் புணையாகச் சிலைப்புவல் லேற்றிற் றலைக்கை தந்துநீ நளிந்தனை வருத லுடன்றன ளாகி.' போரில் வெற்றி பெற்ற வேந்தன் வீரருடன் துணங்கை யாடுதல் மரபு. இம்முறையில் ஆடுகோட்பாட்டுச் சேர லாதன் போர்க் களத்திற் பகைவருடன் பொறாதுவென்று வீரருடன் கைபிணைந்தாடும் துணங்கைக் கூத்தாடியதாகக் காக்கைபாடினியார் குறிப்பிட்டுள்ளார்: ஓடாப் பூட்கை மறவர் மிடறப இரும்பனம் புடையலொடு வான் கழல் சிவப்பக் குருதி பணிற்றும் புலவுக்களத் தோனே துணங்கை யாடிய வலம்படு கோமான்.'" வென்றாடு துணங்கை' என்ற தலைப்பிலேயே எட்டாம் பத்தில் ஒரு பாடல் அமைந்துள்ளது, இப்பாட்டும் போர்க்களத்தே வீரர் ஆடும் துணங்கையைக் குறிப்பிடு கின்றது. பகைப்படையிலுள்ள வீரர் அழிந்தோடவும், பகை வேந்தர்கள் போர்க்களத்தில் பட்டு வீழவும் அப் பகைவரைக் கொன்று பின்னர்த் தோளையுயர்த்திக் கை வீசியாடிய வென்றாடு துணங்கையினையுடையராய்ச் சேரனின் வீரர் துலங்கினர் என்று அரிசில் கிழார் மொழிவர்: 107. பதிற்றுப்பத்து; 6, 2 : 13-16. 108. பதிற்றுப்பத்து; 6, 7 : 1.4.