பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 மன்பதை பெயர வரசுகளத் தொழியக் கொன்றுதோ ளோச்சிய வென்றாடு துணங்கை." இதுகாறும் கூறியவற்றால் துணங்கைக் கூத்து இரு வகைப்படும் என்பதும், மகளிர் தம்முள்ளே கைபிணைந் தாடுவது ஒன்றும், போர்க்களத்தே வெற்றி பெற்ற வேந்தன் தன் வீரருடன் கைபிணைந்தாடுவது பிறிதொன்று என்றும் தெரிய வருகின்றன. இமயம் இமயமலை இரண்டு பாடல்களில் குறிக்கப்பெற்றிருக் கின்றது. முருக்க மரங்கள் செறிந்த மலையிடத்தே இரவில் கண் வளரும் கவரிமான்கள், பகற்போதில் தாம் மேய்ந்த நரந்தம் புற்களையும் அவை வளர்ந்திருக்கும் பரந்து விளங்கும் அருவியோரங்களையும் கனவிற் கண்டு மகிழ்தற்கு இடமான, ஆரியர் நிறைந்து வாழும் பெரிய புகழையுடைய இமயம் என்று இமயமலை இரண்டாம் பத்துள் முதற் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது: கவிர்ததை சிலம்பிற் றுஞ்சுங் கவரி பரந்தில்ங் கருவியொடு நரந்தங் கனவும் ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம்.'" முனிவர்கள் இருந்து தவஞ் செய்யும் இடங்கள் - கடவுளர் விரும்பி யுறையும் இடங்கள் - இவற்றைக் கொண்டுள்ள கற்களாலுயர்ந்த நெடிய மலை இமயமலை என்பதும், அம்மலை தமிழ் நாட்டின் வடபாலுள்ளது என்ற குறிப்பும் பரணர் பாட்டில் இடம் பெற்றுள்ளன: கடவுள் நிலை இய கல்லோங்கு நெடுவரை வடதிசை யெல்லை யிமய மாக. ' - E-i 109. பதிற்றுப்பத்து; 8; 7 : 3.4. 110. பதிற்றுப்பத்து; 2; 1 : 21-23. 111. பதிற்றுப்பத்து; 5, 3 : 6.7.