பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191 குமரி இமயமலை வடவெல்லையாகக் குறிப்பிடப் பெறும் இடங்களில் குமரியும் உடன் தமிழ் நாட்டின் தென் னெல்லையாகக் குறிப்பிடப் பெறுகின்றது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மாற்றார் மறம் சாய்க்கும் மற மாண்பினைக் குறிப்பிடவந்த குமட்டூர்க் கண்ணனார் இமயமலை தொடங்கித் தெற்கின் கண்ணுள்ள குமரி வரை அமைந்து கிடந்த நிலப்பரப்பில் ஆளும் மன்னர்களில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வீரமேம்பாட்டில் இணையற்றவன் என்று குறிப்பிடக் காண்கிறோம்: ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம் தென்னங் குமரியொ டாயிடை மன்மீக் கூறுநர் மறந்தயக் கடந்தே. ' சேரன் செங்குட்டுவனின் வீரத்தினை விளங்கப் பாட வந்த பரணர், இமயத்தினை வடதிசை எல்லையாகவும், குமரியினைத் தென் திசை எல்லையாகவும் கொண்ட நிலப் பரப்பில் வாழும் பகையரசர்கள் அனைவரையும் முரசு முழங்கிய போரிலே புகழமைந்த அவ்வரசர்களின் நாட்டை வென்று, அவ்வாறு புகழ்தற்கேதுவாகிய பழைய நலத்தைக் கெடுத்தான் என்று குறிப்பிட்டுள்ளார்: வடதிசை யெல்லை யிமய மாகத் தென்னங் குமரியொ டாயிடை யரசர் முரசுடைப் பெருஞ்சமம் ததைய வார்ப்பெழச் சொல்பல நாட்டைத் தொல்கவி னழித்த போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ...' கடவுளர் முருகன் இரண்டாம் பத்தின் முதற் பாடலிலேயே முருகக் கடவுள் குறிப்பிடப் பெறுகின்றார் பாட்டின் தொடக்கமே, 112. பதிற்றுப்பத்து; 2; 1 : 23.25. 113. பதிற்றுப்பத்து; 5, 3 : 7.11.