பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192. ஏன் பதிற்றுப்பத்தின் தொடக்கமே முருகப்பெருமான், சூரனைக் கொன்ற வரலாறாக அமைந்துள்ளது. மலை போல் எழும் வெள்ளிய அலைகளும், காற்றால் அலைக்கப் படும் நீரும் மிக்க பெரிய இடப் பரப்பினையுமுடைய கரிய கடலுக்குள் சென்று பிறரை வருத்துதலையே யியல்பாக வுடைய அவுணர்கள் தமக்கு அரணாக நின்று பாதுகாவலைச் செய்யும் சூரவன்மாவினுடைய மாமரத்தினை வேருடன் வெட்டிக் குறைத்த மிக்க புகழும் கடிய சினமும் விறலு முடைய செவ்வேள் பிணிமுகமென்னும் யானையின் மேல் ஏறிச் சிறப்பயர்ந்த செம்மைச் செயல் திறம்படக் கூறப் பட்டுள்ளது: வரைமருள் புணரி வான்பிசி ருடைய வளியாய்ந் தட்ட துளங்கிருங் கமஞ்சூல் நளியிரும் பரப்பின் மாக்கடன் முன்னி அணங்குடை யவுன ரேமம் புணர்க்குஞ் சூருடை முழுமுதல் தடிந்த பேரிசை கடுஞ்சின விறல்வேள் களிறுார்ந் தாங்கு. எனவே பதிற்றுப்பத்துக் காலத்திலேயே முருகன் பெருமை உணரப்பட்ட பான்மையை அறியலாம். திருமால் நான்காம்பத்தின் ஒரு பாடலில் திருமால் வழிபாடு விளங்க உரைக்கப்பட்டுள்ளது. கடல் சூழ்ந்த உலகில் வாழும் மக்கள் தம் தலைமேற் கைகூப்பி ஒருங்கு கூடிச் செய்யும் பேராரவாரம் எட்டுத் திசையிலும் சென்று எதிரொலித்தது. தெளிந்த ஒசையுடன் மணி இயக்கப்பட்டு அவ் மணியோசை கல்லென்ற ஒசை யினை எழுப்புகின்றது. இம் மணியோசையினைக் கேட்டு உண்ணா நோன்பினை மேற்கொண்ட விரதியர் குளிர்ந்த நீர்த் துறைக்குச் சென்று படிந்து நீராடி, திருவீற்றிருக்கும் 114. பதற்றுப்பத்து, 2, 1 : 1.6.