பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 மார்பின்கண் வண்டு மொய்த்து விளங்கும் கொத்துக் களாற் றொடுத்த துளசி மாலையை யணிந்து, காண்போர் கண் கூசுமாறு ஒளிதிகழும் ஆழிப்படையினைக் கையிலே கொண்டு விளங்கும் செல்வனான திருமாலின் செவ்விய அடியில் விழுந்து வணங்கி, நெஞ்சு நிறைந்த மகிழ்ச்சி யுடையவராய் அவரவர் தாம்தாம் இனி துறையும் ஊர் கட்குத் திரும்பிச் செல்கின்றனர்: குன்றுதலை மணந்து குழுஉக்கட லுடுத்த மண்கெழு ஞாலத்து மாந்த ரொராங்குக் கைசுமங் தலறும் பூசன் மாதிரத்து நால்வேறு நனந்தலை யொருங்கெழுந் தொலிப்பத் தெள்ளுயர் வடிமணி யெறியுநர் கல்லென உண்ணாப் பைஞ்ஞலம் பனித்துறை மண்ணி வண்டுது பொலிதார்த் திருளுெம ரகலத்துக் கண்பொரு திகிரிக் கமழ்குரற் றுழாஅய் அலங்கற் செல்வன் சேவடி பரவி நெஞ்சுமலி யுவகையர் துஞ்சுபதி பெயர. ' இப்பாடலில் திருமால் விரும்பி மார்பிலணியும் துளசிக் கொத்து குறிப்பிடப் பெற்றிருப்பதால் இப்பாட்டின் பெயரும் கமழ்குரல் துழாய் ஆயிற்று தனித்தனிப் பூக்களாக எடுத்துத் தொடுக்கப்படாது கொத்துக் கொத்தாக வைத்துத் தொடுக்கப்படும் சிறப்பும், மிகச் சிறிதாகிய தன்னகத்தும் தன்னைச் சூழ்ந்திருக்கும் இலைகளி னகத்தும் ஒரொப்ப மணங்கமழும் மாண்பு முடைய துழாயை கமழ்குரற்றுழாய் எனச் சிறப்பித்த செம்மை கருதி, இப்பாட்டிற்கு இது பெயராயிற்று' என்பர். நாறாத பூவுடையதனை மிக நாறுவதொன்று போலச் சாதி பற்றிச் சொன்ன சொற் சிறப்பான் இதற்குக் 115. பதிற்றுப் பத்து; 4; 1 : 1.10. 116. ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளை. பதிற்றுப் பத்து மூலமும் உரையும், ப. 136. சே. செ. இ.13