பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமழ்குரற் றுழாயென்று பெயராயிற்று' என்பர் பதிற்றுப் பத்தின் பழையவுரைகாரர். இங்குக் குறிப்பிடப் பெற்றி ருக்கும் செல்வன், திருவனந்தபுரத்துத் திருமால்' என்றும் குறிப்பிடுவர். பேய் பேய் பற்றிய சிந்தனையும் சங்க காலத்தே இடம் பெற்றிருக்கக் காணலாம். பேய் மகளைப் பற்றிய குறிப்பு இரண்டு பாடல்களில் வந்துள்ளது. நல்ல வளம் செறிந்த நன் செய் நிலங்கள் பகைவரால் பாழ் செய்யப்பட்டவுடன் பொலிவற்றுத் தோன்றுகின்றன. அங்கு முறுக்கியது போலும் காயையுடைய விடத்தேரை மரங்களும், கரிய உடையென்னும் மரங்களும் நெடிது வளர்ந்தோங்குகின்றன. அப் பாழிடங்களில் தலைமயிர் காய்ந்து செம்பட்டையாய் இருபிளவாய் நிமிர்ந்து நிற்கும் தலையினைக் கொண்ட பேய்மகள் கழுதையின் மேல் ஊர்ந்து திரிகின்றாள். சிேவங் திறுத்த நீரழி பாக்கம் விரிபூங் கரும்பின் கழனி புல் லெனத் திரிகாய் விடத்தரொடு காருடை போகிக் கவைத்தலைப் பேய்மகள் கழுதுார்ந் தியங்க ஊரிய நெருஞ்சி நீறாடு பறந்தலை. ' போரில் வீரர் பொருது போர்க்களத்தே வீழ்ந்து படுகின்றனர். அங்குப் பெரிய சிறகுகளையுடைய பருந்துகள் பினங்களின் குருதியையுண்ண வட்டமிட்டுப் பறக்கின்றன, தலை வெட்டுப்பட்டுக் குறையுடலாக நிற்கும் முண்டமாக நிற்கும் சதைப் பொதியினைத் தின்பதற்கு உலறிய தலையும், பிறழ் பல்லும், பேழ் வாயும், சுழல் விழியும், சூர்த்த நோக்கும், பினர் வயிறும் கொண்ட அழகிய வடிவில்லாத பேய்மகள் காண்பார்க்குப் பேரச்சத்தினைத் தோற்றுவித்து நெஞ்சு நோவச் செய்கின்றது. 117. பதிற்றுப்பத்து 23:12.16.