பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195 அமர்க்கண் அமைந்த அவிர்கினப் பரப்பிற் குழுஉச்சிறை யெருவை குருதி யாரத் தலைதுமிங் தெஞ்சிய வாண்மலி யூபமொ டுருவில் பேய்ம்கள் கவலை கவற்ற. * இவ்விருபாட்டானும் பேய்மகளின் அ ஞ் சத் த க் க தோற்றமும், அருவருக்கத்தக்க செயலும் கூறப்பட்டன. வான சாத்திர அறிவு நம் முன்னோர் அறிவில் மேம்பட்டவர்கள். அந் நாளி லேயே வான சாத்திர அறிவு வாய்க்கப்பெற்றிருந்தனர். புறநானூற்றின் சில பாடல்களில் நம் முந்தையோரின் வான சாத்திர அறிவு கூறப்பட்டிருக்கக் காணலாம். பதிற்றுப்பத்துள்ளும் மூன்று பாடல்களில் 19 GLI TTG, T சாத்திரக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கக் காணலாம். செவ்வாய் என்னும் கோளும் வெள்ளி என்னும் கோளும் சேர்ந்தால் மழை பெய்யாது என்ற செய்தி ஒரு பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. செவ்வாய் சென்றவிடத்து வெள்ளி செல்லாமையால் வேண்டும் புலங்களில் வேண்டுங் காலங் களில் மழை பொழிகின்றது என்ற குறிப்பு, அழல்சென்ற மருங்கின் வெள்ளி யோடாது மழைவேண்டு புலத்து மாரி நிற்ப' என்ற பாடற் பகுதியான் விளங்குகின்றது. பிற கோளினும் நாளினும் வெள்ளி மிக்கவொளி யுடைய கோளாகும். இக்கோள் வானத்தில் நேர் கிழக்கே தோன்றாமல் சிறிது வடக்கே ஒதுங்கித் தாழ்ந்து விளங்கு கின்றது. மழை வளந்தரும் கோள்களில் அதுவே தலைமை 118. பதிற்றுப்பத்து ; 7: 7 : 8.11. 119. பதிற்றுப்பத்து; 2:3 : 25-26 2; 3; 4 : 23.25 3. 7; 9 : 13-17. - 120. பதிற்றுப்பத்து; 2:3:25-26.