பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 பெற்ற கோளாகும். ஆயினும் ஏனைக் கோள்களும் கூடி யிருந்தாலன்றி மழை வளம் நன்கு சிறவாது. இக்கருத்தினை உள்ளடக்கிய பாடற்பகுதி வருமாறு: வயங்குகதிர் விரிந்து வானகஞ் சுடர்வர வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி பயங்கெழு பொழுதோ டாகிய நிற்ப. ' வெள்ளி மற்றக் கோள்களுடன் கூடி நின்று மழை பொழியா நின்ற சிறப்பால் இப்பாடலுக்குச் சீர்சால் வெள்ளி' என்ற பெயர் அமைந்தது. நிலத்தில் மிகுந்த விளைபொருள்கள் விளைய, ஞாயிற்றின் வெம்மை தணிந்து தண்மை நிலவ, உலகிற்கு நல்ல பயனைச் செய்யும் வெள்ளியென்னும் கோள் மழைக்குக் காரணமாகிய ஏனை நாட்கோளுடனே சென்று நிற்ப, வானத்தில் மழை முகில்கள் நிரம்பப் பரவி நல்ல மழையைப் பெய்வது காரணமாக நல்ல வளம் நாட்டில் நிறையச் செல்வக்கடுங்கோ வாழியாதன் நாடு துலங்கு வதாகக் கபிலர் பெருமான் பாடுவர்: நிலம்பயம் பொழியச் சுடர்சினங் தணியப் பயங்கெழு வெள்ளி யாகிய நிற்ப விசும்புமெய் யகலப் பெயல்புர வெதிர நால்வேறு நனந்தலை யோராங்கு கந்த. ' வானத்தையும் அளந்து கண்ட அறிவு நம் முன்னோ ருடையது என்று கண்டு வியக்கத் தோன்றுகின்றது. வானமனைத்து மளங்த வண்டமிழ் வாழியவே என்று பாரதியார் பொருத்தமுறப் பாடினார். கடல் வாணிகச் சிறப்பு தமிழ்நாடு பண்டு கடல் கடந்த நாடுகளோடு வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது. எகிப்து, ரோம், சால்டியா 121. பதிற்றுப்பத்து: 3; 4 : 23.25. 122. பதிற்றுப்பத்து; 7:9 - 13-16.