பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197. முதலிய நாடுகளோடும், சீனப் பேரரசுடனும், ஜாவா, சுமத்ரா முதலிய தீவுகளுடனும் தமிழ்நாடு வாணிபப் பொருள்களை இறக்குமதி ஏற்றுமதி செய்து வந்தது. பதிற்றுப்பத்தின் ஒரு பாடலில் இத்தகு வாணிகத்தைப் பற்றிய சிறு குறிப்பு இடம் பெற்றுள்ளது. பெருங்கடலைக் கடந்து சென்று மீளுதலால் பழுதுற்ற மரக்கலத்தின் பழுது போக்கி முன்போல வலியுடைத்தாக்கும் கடல் வாணிகர் என்ற குறிப்பு, கடல் வாணிகச் சிறப்பினை விளக்குவதாக உள்ளது: பெருங்கடல் நீந்திய மரம்வலி யுறுக்கும் பண்ணிய விலைஞர். * பழக்கவழக்கங்கள் கள் குடி பழந்தமிழரிடையே கள் குடிக்கும் வழக்கம் இருந்த தாகச் சங்க இலக்கியங்களால் அறியலாம். கள் குடித்து மகிழ்தல் அந்நாளில் ஒரு சிறப்பாகக் கருதப்பட்டது. பகைப் புலத்தில் கைப்பற்றிய யானையின் வெண்கோட்டினை எடுத்துக் கொண்டு, கள் விற்கும் கொடியசையும் கடைவீதி சென்று யானைத் தந்தத்திற்கீடாகக் கள்ளைப் பெற்றுக் குடித்து மகிழ்கிறார்கள் என்றும் உத்தரகுரு என்னு மிடத்தில் வாழ்பவர் போன்று அச்சமின்றி இன்பமே துய்த்து வாழ்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது: வேந்துர் யானை வெண்கோடு கொண்டு கட்கொடி நுடங்கு மாவணம் புக்குடன் அருங்கள் கொடைமை தீர்ந்தபின் மகிழ்சிறந்து நாம மறியா வேம வாழ்க்கை வடபுல வாழ்நரிற் பெரிதமர்ந் தல்கலும் இன்னகை மேய பல்லுறை பெறுப.* 123. பதிற்றுப்பத்து; 8; 6 : 4-5. 124. பதிற்றுப்பத்து; 7; 8 :9-14.