பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நெஞ்சு கோடாச் சேர சோழ பாண்டியர் மூவரால் ஆளப் பெற்றுவரும் சிறப்புடையது என்றும் சுட்டினர். தமிழ் வேந்தர்களின் அடையாளப் பூமாலையினைத் தொல்காப்பியனார். போங்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருங் தானையர் மலைந்த பூவும்: என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பழமையும் பெருமையும் நிறைந்த மூவேந் தருள்ளும் சேர மன்னர்களே பழமையிலும், நாட்டின் பரப்பிலும், கொடைமடத்திலும், மற்ற பிற சிறப்பு களிலும் முதலாவதாக வைத்து எண்ணப்படும் தகுதிக் குரியவராகின்றனர். இதற்குரிய காரணங்களை இனி ஒருவாறு காண்போம். சோழ மரபினர் சூரிய வமிசத்தவராக இலக்கியத்தில் குறிக்கப் பெறுகின்றனர். பாண்டியர்கள் சந்திர வமிசத் தினைச் சேர்ந்தவர்கள் என்பது பெறப்படுகின்றது." ஆயினும் இவர்களினும் சேர அரசர்கள் தொன்மைச் சிறப்பு உடையவர்களான காரணத்தினால் அவர்களது மரபினை இன்னதென வரையறுத்துக் கூறும் நூல்கள் இல்லை. பிற்காலத்து நூல்கள் சேரரை அக்கினி குலத்திற் குரியவராகக் கூறக் காணலாம். ஆயினும் இக்கூற்றிற்குச் சான்று பகரப் பழைய நூல்கள் துணை செய்யவில்லை. -_ 3. தொல்காப்பியம்; பொருளதிகாரம் : புறத்திணை யியல், 5. - 4. செங்கதிர்ச் செல்வன் திருக்குலம்’-மணிமேகலை, பதிகம்: 9. 5. ಣ್ಣ செல்வம் திருக்குலம்’ -சிலப்பதிகாரம்,

23.

6. இவன் செந்தழலோன் மரபாகி யீரேழுலகம் புகழ் சேரன்" -(வில்லிபாரதம்; திரெளபதி மாலையிட்ட சருக்கம்: 45) -