பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 வித்தியது முளையாத களர் நிலத்தே தொழிலினைச் செய்யும் மறவர், மருத வளஞ் சான்ற மென்பாலில் நல்ல விளைவு உண்டாதலை அறிந்து அவரொடு பொர, அது போது போரில் தோற்கும் மருபுல வினைஞர் தம்பால் உள்ள வரகும் கொள்ளும் தண்டமாகத் தருவர். அத் தண்டப்பொருளை விற்றுக் கள் குடிப்பர் மென்பாலில் வாழும் உழுதொழில் வினைஞர் என்று அரிசில்கிழார் குறிப்பிடுவர்: வண்புலங் தழீஇய மென்பால் தோறும் மருபுல வினைஞர் புலவிகல் படுத்துக் கள்ளுடை நியமத் தொள்விலை கொடுக்கும் : வேள்வி சங்க காலத்திலேயே வேள்வி இயற்றும் வழக்கம் வேந்தரிடை இருந்ததென்பதனைப் புறநானூற்றுப் பாடல் கொண்டு அறியலாம். சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி முதலிய சங்ககாலச் சோழ பாண்டியர் வேள்வி வேட்டதன் சிறப்பால் பாராட்டப்பட்டிருக்கக் காணலாம். செல்வக்கடுங்கோ வாழியாதன், குன்றாத கோட் பாட்டினையுடைய சான்றோராகிய சுற்றத்தார் நீங்காது. சூழ, போர்க்களத்தே பகைவரை வென்று செய்யும் கள வேள்வியால் வெற்றிக் கடவுட்குப் பலியூட்டி அக்கடவுளை மகிழ்வித்ததோடு, வீரருலகத்து வாழும் சான்றோரை அவர் செய்த வீரச் செயல்களைப் புலவர் பாட இருந்து கேட்குமாற்றால் மகிழ்வித்தான் என்றும் கபிலரால் செல்வக்கடுங்கோ வாழியாதன் சிறப்பிக்கப்பட்டுள்ளான்: தொலையாக் கொள்கைச் சுற்றஞ் சுற்ற வேள்வியிற் கடவுளருத்தினை கேள்வி உயர்நிலை யுலகத் தையரின் புறுத்தினை.' 125. பதிற்றுப்பத்து; 8; 5 : 8.10. 126. பதிற்றுப்பத்து: 7, 10 : 12-14.