பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 ந ட்ப ைமந்த சான்றோர்க்குப் பணிந்தொழுகும் மென்மையினையும், பகைவர்க்கு வணங்காத ஆண்மை யினையுமுடைய இளந்துணையாகிய மக்களைக் கொண்டு முதியராகிய பெரியோர்க்குரிய தொண்டினைச் செய்வித்து, அதன்வழி தொன்று தொட்ட தனது கடமையினை ஆற்று வதாகச் செல்வங்கடுங்கோ வாழியாதன் கபிலரால் குறிப்பிடப் பெற்றுள்ளான்: வணங்கிய சாயல் வணங்கா வாண்மை இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித் தொல்கட னிறுத்த வெல்போ ரண்ணல்.' ஈண்டு முதியர்ப் பேணித் தொல்கடன் இறுத்தல்' என்ற தொடர்க்கு விளக்கம் வேண்டப்படுகிறது. முதுமை யுற்ற சான்றோர்க்கும் முனிவரர்க்கும் தாம் பெற்ற இளந்துணை மக்களைக் கொண்டு அவர்க்குத் தள்ளாமை வந்துற்ற காலத்தில் வேண்டுவன புரிந்து உதவுதல் ஓர் ஆண்மகனின் கடன் என்று அன்று போற்றுப்பட்டதாக அறிகிறோம். மாறாக, முதியர் என்றது பிதிரர்கள் என்றும், அவர்க்கு இல்வாழ்க்கை நெறிநின்றார் ஆற்ற வேண்டிய கடன், மக்களைப் பெறுதல் என்னும் கொண்டு, இளந்துணைப் புதல்வர்ப் பேற்றால் முதியராகிய பிதிரர்க்குரிய பழங்கடனை இறுத்தல் மரபு என்பர். வேறு சிலர் தாய்மாமன் முதலாயினோர்க்குச் செய்யுங் கடன் தொல்கடன் என்றும், தந்தையர்க்குச் செய்யுங் கடன் பிதிர்க்கடன் என்றும் கூறுப. ஆனால் மகப் பேற்றால் பிதிரர்கடன் கழிப்பது என்பது வடவர் கொள்கையாகும். ஏனெனில் மகப்பேறு பிதிர்க்கட னிறுக்கும் வாயில் என்று திருவள்ளுவர் கூறியிருக்கவில்லை. மேலும், முதுமை கண்ட சான்றோர்க்கும் முனிவர் கட்கும் தாம் பெற்ற இளந்துணை மகாரைக் கொண்டு தொண்டு செய்யவிருக்கும் செயல் இராமாயணம் பாரதம் முதலிய 127. பதிற்றுப்பத்து 7:10:20-22.