பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 இதிகாசங்கள் வழியும் புலனாகக் காணலாம். மேலும் இன்றும் இளைய மணமக்களை மணம் புணர்ந்த ஞான்று வாழ்த்தும் முதியோர் :விரைய மக்களைப் பெற்றுத் தருக; அவர்கள் கையினால் தண்ணிர் அருந்தினால் எங்கள் உயிர் அமைதியுறும் என்று வாழ்த்தும் வழக்குண்மையை நோக்கத் தமிழ்ப் பண்பாட்டிற்கியைந்த விளக்கத்தினைப் பெறுகிறோம். மேலும், கடற்பிறக் கோட்டிய செங்குட்டுவனைக் காசறு செய்யுட்பாடிய பரணர்க்கு, அவன்தன் மகன் குட்டுவன் சேரலைக் கொடுத்த செய்தி பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பதிகத்தால் விளக்க முறுவதால் சேரவேந்தர் மரபிற்கு இயைந்த இச் செய்தி இனிதுறப் புலனாகக் காணலாம். அடுத்து, எட்டாம்பத்தில் மான்தோலைத் துாய்மை செய்து போர்த்துக் கொண்டு வேள்வி செய்யும் செயல் கூறப்பட்டுள்ளது. பெருமலைகளை யடைந்து அவற்றிடத்தும், சிறுசிறு மலைகளையடைந்து அவற்றிடத்தும் தேடிக் குற்றமற மான் இலக்கணம் ஆராய்ந்து கொள்ளும் அறிவினோர், சிதறிக் கிடத்தலையுடைய பசிய பொறிகளையும், கவைக் கோற் போலக் கிளைத்தலையுடைய கொம்பினையும், புள்ளியினையுமுடைய மானைக் கொண்டு, அதன் உட்புறத்துத் தசையினைக் களைந்து, ஏனை அழுக்கு களையும் போக்கி, எஞ்சி நின்ற ஒளிவீசுகின்ற வட்டமாக அறுத்த தோலின் விளிம்பிலே இனமாகச் சேரக்கட்டி, கூர்மையுடைய ஊசியால்தொழில் வல்லோன் உட்புறத்தே மணிகளைப் பதித்து அழகுற அணி செய்து சூடுதற்குரிய நிலைமையினை உறுவித்து ஒளி திகழ்கின்ற தோற்றத்தைப் பெறுவித்தலால் விசும்பிலே பருந்தானது ஊனென்று கருதி யதனை யுற்றுக் கவர்தற்கு நினையுமாறு நலம் பெற்ற உயரிய அத் தோற்பணியாகிய மணியை அணி கின்ற நல்ல தோளினையுடையவளாகத் தகடூர் எறிந்த