பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201 பெருஞ்சேரல் இரும்பொறையின் தேவி குறிப்பிடப் பெற்றுள்ளாள்: புள்ளி யிரலைத் தோலு னுதிர்த்துத் தீதுகளைந் தெஞ்சிய திகழ்விடு பாண்டிற் பருதி போகிய புடைகிளை கட்டி எ.குடை யிரும்பி னுள்ளமைத்து வல்லோன் சூடு நிலையுற்றுச் சுடர்விடு தோற்றம் விசும்பாடு மரபிற் பருந்து றளப்ப நலம்பெறு திருமணி கூட்டு நற்றோள் ஒடுங்கீ ரோதி யொண்ணுதல். ' இப் பகுதியினால் வேள்வி செய்தற்கண், அதனைச் செய்வோர் நல்லிலக்கணம் அமைந்த புள்ளிமானின் தோலைத் தூய்மை செய்து போர்த்துக் கொள்வர் என்பதும், வேள்வி செய்வோன் மனைவி அம் மான் தோலை வட்டமாக அறுத்து அதனைச் சுற்றிலும் முத்துக் களையும் பிற வுயரிய மணிகளையும் கட்டி, நடுவே மாணிக்க மணிகளைத் தைத்துத் தோளிடத்தே அணிவள் என்பதும், அரசமாதேவி அத்தகு தோலுடையை அணிந்தனள் என்பதும் அறியப்படுகின்றன. மேலும், நாடு காத்தற்கு வேண்டும் அரசியலறிவு வகை பலவும் முற்றக் கற்றுத் துறைபோகிய சிறப்பும் நிறைந்த நன்மகனை இந் நிலவுலகத்து வாழ்வார் பொருட்டுப் பெற்றுத் தந்ததாக அரிசில்கிழார் குறிப் பிட்டுள்ளார். அரிசில் கிழாரின் இந்தக் குறிப்பு மிகவும் இன்றியமையாத தென்றும், இக்குறிப்பின் வழி சேரவேந்தர் மக்கட்டாயமே உடையவர் என்பதும் அறியப்படுவதாக அறிஞர் கூறுவர்.199 128. பதிற்றுப்பத்து 4 : 10.17. 129. The Putra Kamesti Yaga is, it may be suggested, mentioned in poem No. 74 by Arisilkizhar, a Non Brahmin poet......... The Putrakamesti poem,