பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 வாழ்வின் முடிவு இறந்தவரைப் புதைப்பதும் எரியூட்டுவதுமாகிய இரு வகை வழக்கமும் அந்நாளில் இருந்தது. மன்னர் இறந்த வழி அவர் உடலை மண்ணாற் செய்த பானைக்குள் வைத்துப் புதைப்பது மரபு என்பதும் பின்வரும் பகுதியால் தெரியவருகின்றது. ஒழுகை புய்த்தோய் கொழுவில் பைந்துணி வைத்தலை மறந்த துய்த்தலை கூகை கவலை கவற்றுங் குராலம் பறந்தலை முரசுடைத் தாயத் தரசுபல வோட்டித் துளங்குநீர் வியலக மாண்டினிது கழிந்த மன்னர் மறைத்த தாழி வன்னி மன்றத்து விளங்கிய காடே." தாழி என்பது முதுமக்கள் தாழி என்பதும், வன்னி மன்றம் என்பது, சுடலை நோன்பிகள் மடையிட்டுப். பரவுமிடம் என்பதும் தெரியவரும். கூகை குரலெழுப்பி. வருத்தும் இடம் இடுகாடு என்பதும் பெறப்படும். இவ்வாறு இன்னும் பல பழக்கவழக்கங்கள் பதிற்றுப் பத்தில் இடம் பெற்றிலங்கக் காணலாம். இதுகாறும் கூறியவற்றால் பதிற்றுப்பத்துக் காலத்தில் வாழ்ந்த பழந்தமிழரின் சமுதாய வரலாறு ஒருவாறு காணப்பட்டது. however, conclusively proves, it was the son of the consort that becomes the king, thus establishing beyond doubt the patriarchal succession of these kings. ■ —Prof. T. P. Meenakshisundaranar—Introduction to the edition of Patirruppattu by Thiru Avvai S. Duraiswami Pillai. " 130. பதிற்றுப்பத்து 5:4:17.23.