பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பதிற்றுப்பத்தின் இலக்கியநயம் சேரமன்னர் பற்றிய பாடல்களின் தொகுதி பதிற்றுப் பத்தாகும். பத்துப் பத்து அகவற்பாக்களால் அமைந்த பத்துப் பகுதிகளைக் கொண்ட நூல் ஆதலின் இது பதிற்றுப்பத்து எனப் பெயர் பெறலாயிற்று. ஒவ்வொரு சேரமன்னரைக் குறித்துப் பாடப் பெற்றமையின் இந்நூல் பத்துப் பகுதிகளாகக் கொள்ளத் தக்கது. இதிலுள்ள பத்துப்பத்துக்களும் முதற்பத்து, இரண்டாம் பத்து: என்று இவ்வாறு எண்ணால் பெயர் பெற்றுள்ளன. இ த ைன த் தொகுத்தார், தொகுப்பித்தார் பற்றி யாதொன்றும் அறியக்கூடவில்லை. நூலின் முதற்பத்தும், பத்தாம் பத்தும் பிரதிகளில் மறைந்து போயின. ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் அப் பத்தைப் பாடினார், அதன் பாட்டுடைத் தலைவர், அவர் செய்த அரும்பெருஞ் செயல்கள், புலவருக்கு அவர் அளித்த பரிசில் முதலிய செய்திகளைக் குறிப்பிடும் பதிகம் உள்ளது. இப்பதிகங்கள் ஆசிரியப்பாவில் தொடங்கி, கட்டுரையாக முடிவு பெறுகின்றன. இவை சாசனங்களில் காணப்பெறும் மெய்க்கீர்த்திகளைப் போன்ற அமைப்பை உடையன. இவை, தொகுத்தார் காலத்திற்குப் பிந்தியும், இதன் உரையாசிரியர் காலத்திற்கு முந்தியும், தோன்றியதாதல் வேண்டும் என்பது சில ஏதுக்களால் புலனாகின்றது. இந்நூலுக்குப் பழைய உரை ஒன்று உள்ளது. இதனை எழுதியவரைப் பற்றிய செய்திகள் ஒன்றும் அறியக்கூட வில்லை. o இப்பழைய உரை, ஒவ்வொரு செய்யுளின் கருத்தையும் விளக்கி, இதனால் இன்னது கூறப்பெற்றது-என்று சுட்டுகின்றது. இங்ங்னம் உரையாசிரியர் எழுதியுள்ள தொடர்களையே சுருக்கி, ஒவ்வொரு பாட்டின் தொடக்.