பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 கத்திலும், தலைப்பு இடம் பெற்றுள்ளது. இவை பாடலின் உள்ளுறைப் பொருளைப் பொதுமையாக உணர உதவு வனவாம். ஒரு சில செய்யுட்களில் சில சீர்களும் அடிகளும் சிதைந்து போயின. நாலாம் பத்துச் செய்யுட்கள் மட்டிலும், ஐங்குறு நூற்றிலுள்ள பதினெட்டாம் பத்தைப் (தொண்டிப்பத்து) போல், அந்தாதியாக அமைந்துள்ளன. பதிற்றுப்பத்தின் ஒவ்வொரு பாட்டிலும் வருணனைச் சிறப்புக்கு உயிராக உள்ள சொற்றொடர் ஒன்று அப் பாட்டின் பெயராக வழங்குகின்றது. மற்றொரு சிறப் பியல்பு, ஒவ்வொரு பாட்டுக்கும் வண்ணமும் துாக்கும் குறிக்கப்பட்டுள்ளமை ஆகும். இக்குறிப்புகள் பதிற்றுப் பத்து இசையோடு பாடப் பெற்றுவந்த நூல் என்பதைத் தெரிவிக்கின்றன.

பதிற்றுப்பத்துக் காலத்தில் சேரநாடு கடம்பர் குறும்பு ஒழிந்திருந்தது. வடபகுதியில் வான நாடு வரம்பு செய்யப் பட்டிருந்தது. கிழக்கிலிருந்த கொங்கு நாடும் சேரர் ஆட்சியில் இருந்தமையின் அதன் எல்லையில் வாழ்ந்த அதியரும் மறவரும் சோழரும் அடங்கி இருந்தனர்.'
  • புலவர்கள், அரசர்கள் இசையும் கூத்துமாகிய இன்பத் துறைகளில் ஈடுபட்ட காலத்து அவர்களைத் தெருட்டிக் கடமைக்கண் கருத்துரன்றச் செய்தனர். அரசர் போர் மேற்கொண்ட காலத்து அவர் உள்ளத்தில் அருள் தோன்று மாறு பாடிப் பகைவர் தேயம் உய்யக் கொண்டனர்."
  • ஏனைத் தொகை நூல்களைவிட இந்நூற்கண் வரும் பாட்டுக்கள் பொருள் நிறைந்து, சொற்செறிவு மிகுந்து, ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டிருத்தலின் தமிழ் கற்போர் இதனை இரும்புக் கடலை' என இயம்பு வதுண்டு.'

1. ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை - கலைக்களஞ் சியம்-ஆறாம் தொகுதி. பக்கம் 718.