பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 பதிற்றுப்பத்து எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. பதிற்றுப்பத்துப் பாடிய புலவர்கள் எண்மராவர். இவர்கள் பாடல்களுள் கவிதைநலம் கெழுமிய சுவைப் பகுதிகள் பல உள. ஆழ்ந்த உணர்ச்சி, அரிய கற்பனை, தெளிந்த, வடிவம், உயரிய குறிக்கோள் முதலியன கொண்டு இவர் தம் கவிதைகள் சிறந்து காண்கின்றன. பதிற்றுப்பத்தின் ஒவ்வொரு பாட்டும் அப்பாடலுள் வந்துள்ள தொடரா லேயே பெயரிட்டு வழங்கப்படுகின்றது. பதிற்றுப்பத்தின் கவிதைவளம் குறித்துப் பேராசிரியர் தெ. பொ. மீ. அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்: “The Sangam poets caught the spirit of the poetic moment and enshrined it in the most appropriate and correct poetic phrase, afraid of spoiling its effect by an elaboration. Brevity is the life of their poetry. This explains. why the anthologies of the Sankam verses are arranged according to the length of verses as “Kurum Tokai" Nedum Tokai ‘Ainkurunuru' etc; In every poem there is the heart of life centre—a beautiful phrase which is the very quintessence of the poem and this phrase, by common acceptance and appreciation, becomes, according to Sankam usage, the very name of the verse. This is seen in every one of the verses in the present work.” இக்கூற்றுக்குச் சான்றாகப் பதிற்றுப்பத்தில் ஒரு பாடலை எடுத்துக்கொண்டு அப் பாட்டின்கண் இடம் பெற். றுள்ள ஓர் உயிர்நாடியான தொடர் எவ்வாறு அப்பாட்டின் தலைப்பாகப் பொருத்தமுற அமைந்துள்ளது என்பதனைக் காண்போம். மூன்றாம் பத்தினைப் பாடியவர் பாலைக் கெளதமனார் ஆவர். இப்பத்து, பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பற்றியதாகும். இப்பத்தின் இரண்டாவது 2. Introduction to Thiru. Avvai S. Duraiswami Pillai's edition on Patirruppattu, p. 8.