பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 பாடலின் தலைப்பு, கயிறுகுறு முகவை' என்பதாகும். இப்பாட்டு, பல்யானைச் செல்கெழு குட்டுவன் கொங்கு நாட்டை வென்று அடிப்படுத்திய வென்றித் திறலை விளங்க உரைப்பதாகும். இப்பாட்டில் கொங்குநாட்டின் வறட்சி குறிப்பிடப்படுகின்றது. கொங்குநாடு ஆற்றுநீர் வளம்அவ்வளவாக இல்லாத நாடு ஆகும். எனவே கொங்கு நாட்டு மக்கள் கிணறுகளில் ஊறும் ஊற்றுநீர் வளத்தையே நம்பி வாழ்ந்தனர். கொங்குநாட்டிற்கே உரிய தலையாய செல்வம் கால்நடைச்செல்வமாகும். மேட்டுநிலத்தாலான கொங்குநாட்டில் பசுக்களுக்கு நீர் கிடைத்தல் அரிது. எனவே உழைப்புத்திறனும் முயற்சி அருமையும் உடைய உடைய கொங்கர்கள் கூரிய இரும்புக் கோடாரிகளைக் கொண்டு நிலத்தை அகழ்ந்து ஆழமான கிணறுகளைத் தோண்டுவர். நீண்ட கயிறுகளில் பிணைக்கப்பட்ட சிறிய முகவைகளைக் கட்டி ஆழ்ந்த கிணற்றினின்றும் நீர் முகப்பர். பசுக்கூட்டங்கள் நீர் முகந்துவரும் முகவை களைக் கண்ட உடனே நீர்வேட்கை கொண்டு அவற்றின் குளுமையும் நீர்மையும் நோக்காது அம்முகவைகளை மொய்க்கும் அவ்வாறு மொய்க்கும் பசுக்களுக்குக் கொங்கு நாட்டின் மக்கள் நீர்முகந்து தருவர். இவ்வாறு நீர் நல்குவது பெரிதன்றித் தன் கயிற்றையே நின்று வாங்கப் படும் முகவை என்ற பொருளினைத் தரும் கயிறு குறுமுகவை என்ற தொடர் கொங்கு நாட்டின் நீர்வளத்தி அருமையினையும், நீர் வேட்கை கொண்ட ஆநிரையின் நிலையினையும் விளக்குதலால் இப்பாட்டுக் கயிறுகுறு முகவை' என வழங்கப்பட்டது. The consideration of the literary names of the poets has revealed the characteristic feature of the Sangam poetry, trying to express the quint-essence of a poetic situation in a concentrated phrase of a few words. Each of the poems of “Patirruppattu' is named after its arresting phrase which compels us, by its poetic beauty, to