பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 வரலாற்றாசிரியர் சிலர் சேரர் மரபு தொடக்கக் காலத்தில் தெய்வ சம்பந்தம் பெற்றதாகக் கூறுவர். பண்டை நூல்களில் வானவர் என்ற சொல் சேரரைப் பல விடங் களிலும் குறிப்பிடுவதால் இக்கருத்து எழுந்தது போலும்! சேரர் என்ற சொல் சேரலர் என்ற சொல்லிலிருந்து வந்ததாகக் கருதுவர். சேரல்' என்பது மலையினைத் குறிக்கும். மேலைக் கடலுக்கும் மேற்குத் தொடர்ச்ஓ மலைக்கும் இடைப்பட்ட பகுதியினைக் கொண்டு அரசாண்டதால் சேரலர் என்று வழங்கப்பெற்றுப் பின்னர் அது சேரர்" எனத் திரிந்திருக்கக்கூடும். சேர நாட்டின் கிழக்கெல்லை மேலை மலைத்தொடராகும். இம்மலை தெற்கே பொதியமலை தொடங்கி வடக்கே தபதியாற்றங்கரை வரை உளது. வடநாட்டினர் தம் மொழியில் இம்மலையினை சஃயாத்திரி என அழைத்தனர். சஃயம் என்றால் தொடர்பு; அத்திரி என்றால் LD ©Ꭰ © . எனவே தொடர்ச்சியான மலை எனப் பொருள்படும். இத்தொடர் தமிழ்ப்பகுதியின் மேற்கே இருப்பதால் குடவரை என்றும், இந்நாட்டை ஆண்ட மன்னர்கள் 'குடவர்' என்றும் கூறப்பட்டனர். இராசராசனுடைய கல்வெட்டுகள் சேர நாட்டைக் குடவரை நாடு' எனக் குறிப்பிடுகின்றன. தெய்வப் புலமைச் சேக்கிழார் பெருமான், மாவீற் றிருந்த பெருஞ்சிறப்பின் மன்னும் தொன்மை மலைநாடு’ என்று சேரநாட்டை மலைநாடு என்பர். சேர மன்னரைப் 'பாவீற்றிருந்த பல் புகழினர் எனக் குறிப்பிடுவர். 7. வி. கனகசபைப் பிள்ளை, -(The Tamils 1800 years ago, P, 52) * 8. பிற்காலச் சோழர் சரித்திரம், பக். 103. 9. திருத்தொண்டர் புராணம்; சேரமான் பெருமாள் நாயனார் புராணம்; 1. . - . . 10. 22 ; : - . . 1 : . . ג כ. Í