பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209 இயற்கை வருணனை நாட்டுவளத்தைப் பாடும் கவிஞர்கள் இயற்கையின் இனிய செவ்வியினை நயமுறக் கிளத்தியுள்ளனர். மருத நிலத்தின் அழகினை வருணிக்க வந்த பாலைக்கெளதமனார் பின்வருமாறு வயல்சான்ற மருதவளத்தினை வடித்துக் காட்டியுள்ளார்." வயல்வெளிகளில் மருத மரங்கள் ஓங்கிவளர்ந்துள்ளன. அம்மரக்கிளைகளில் புள்ளினங்கள் பல தங்கி ஒலிக்கின்றன. செறிவினை உடைய இடமகன்ற மணல்மலிந்த பெருந் துறைக்கண் விளையாடும் இளமகளிர் காஞ்சிமரத்தின் பூவினையும் தளிரையும் பறித்தலால் அம்மரங்கள் சிதைந்த நிலையில் காட்சி தருகின்றன. முருக்க மரங்கள் தாழ்ந்த பூக்களைச் சொரிதலால் அவை உயர்ந்த நெருப்புப்போலத் தோன்றுகின்றன. அடைகரையில் சங்கு களும் நாரைகளும் செவ்விய வரிகள் தாங்கிய நாரையினப் பறவைகளும் திரிகின்றன. கழனிக்கு வயிலாக உள்ள குளங் களைச் சார்ந்த விளைநிலத்தின் நீர்ப்பரப்பில் நெருப்புப் போலும் பூவினை உடைய செந்தாமரை மலர்கள் மலர்ந் துள்ளன. வளையணிந்த விளையாட்டுப் பெண்கள் பறிக் காமையால் தானே மலர்ந்த ஆம்பல் எங்கும் நிறைந் துள்ளன. இத்தகு கண்ணுக்கினிய காட்சிகள் நிறைந்து நீங்காத புதுவருவாயினைக் கொண்டு சேரநாடு மருதவளத் தினை மாண்புறக் கொண்டு துலங்குகின்றது. இவ்வாறு பற்பல இயற்கைக்காட்சிகளைக் கவிஞர்கள் வருணித்துக் காட்டியுள்ளனர். | - H ஒலிநயம் புலவர்கள் கையாளும் சொற்கள் கேட்போர் செவி களில் ஒலிநயம் ஊட்டக்கூடியவை. சில தொடர்கள் படிக் கின்ற பொழுதே பாவோசையும் ஒலிநயச் சிறப்பும் - 4. பதிற்றுப்பத்து; 23 : 18.25. சே. செ. இ.14