பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213 வினைபயன் மெய் உருளன்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம் என்று உவமைகள் பிறக்கும் நிலைக்களத்தினை நான்காகக் குறிப்பிட்டுப் போந்தார். இந்த அடிப்படையில் பதிற்றுப் பத்தின் உவமைநயங்கள் ஒன்றிரண்டு காண்போம். or (Action) சிரல்பறவை நீர்நிலையில் மீனைத் தம் அலகால் கொத்தி எடுத்துச் செல்லும் செயல், மார்பின் புண்ணைத் தைய்த்த நீண்ட ஊசியின் செயலோடு ஒப்பிடப்பட் டுள்ளது. மேலும் கடல்அலைகள் கரையை மோதிமோதி உடைந்து எழுப்பும் ஒலி இடியின் முழக்கத்திற்கு ஒப்பிடப் பெற்றுள்ளது.28 மறவர் பகைவரைப் போர்க்களத்தில் அழிக்கும் செயல் இடியின் அழிவுச் செயலோடு ஒப்பிடப் பெற்றுள்ளது.29 பிறிதோரிடத்தே இடியோசை, முரசி லிருந்து எழும் ஓசையோடு ஒப்பிடப்பெற்றுள்ளது. காற்று வேகமாக அடிப்பதுபோலப் போரில் குதிரைகள் விரை வாகப் பறந்து செல்கின்றன. பலியைப் பெற்றுச் செல்லும் எமன்போலச் சேர மன்னன் பகைவரிடமிருந்து திறை பெற்று மீள்கின்றான். அ மலையினின்று இழிந்து வரும் அருவியின் அசைவு காற்றில் அசைந்தாடும் கொடியை ஒத்துள்ளது. ஆ. யமனைப் போன்று கொலைத் தொழில் 26. தொல், உவமையியல்: நூ. 1. 27. பதிற்றுப்பத்து; 42 : 3.4. 28. 7 : 51 : 1-2. 29. 15 58 : 4. 30. 5 : 66 : 4t 31. 80 : 13. 31.அ. 5 : 71 : 23-24. 31ஆ. 15 25: 11.