பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217 ஆங்காங்கே விரவி வந்துள்ளன. அக்காலத்தில் செய்திகள் புனைவு இன்றிக் கூறப்பட்டிருப்பதால் அரிய வரலாற் றுண்மைகளை நாம் அறிய முடிகின்றது. சேரநாட்டு ஊர்களைப் பற்றியும் சில பாடல்களில் குறிக்கப்படு கின்றது. தொண்டி என்னும் நகரைப் பற்றிய குறிப்புகள் மூன்று இடங்களில் வந்துள்ளன. திண்ணிய தேரையுடைய சேரனின் தொண்டி என்றும்', கானற்சோலை சூழ்ந்த தொண்டி என்றும், கல்லென்ற ஒலியையுடைய புள்ளினம் வாழும் கானற்சோலைகளையுடைய தொண்டி நகர் என்றும் கூறப்படுகின்றது. அடுத்து மாந்தை என்னும் கடற்கரை நகர் இரண்டிடங் களில் சுட்டப்படுகின்றது. சோழன் வெற்றிபெற்ற கழுமலம் என்னும் போரும் பங்குனிவிழா மிகச் சிறப்பாக நடைபெறும் உறையூரும் உள்ளிவிழா நடை பெறும் வஞ்சியும் குறிக்கப்படுகின்றன. சேர அரசர்கள் செய்தியே பெரும்பாலும் கூறப்படு கின்றது. திண்ணிய தேர்களை உடைய சேரனைப் பற்றியும்?, மூவன் என்னும் குறுநில மன்னனின் வலிமையை அடக்கி அவனுடைய பற்களைப் பிடுங்கித் தன்னுடைய கோட்டைக்கதவில் பதித்த சேரமான் கணைக்கால் இரும் பொறையைப் பற்றியும் , குட்டுவன் சேரலது குடமலைச் சுனையிலுள்ள கரிய இதழை உடைய குவளை பற்றியும்’ 2. நற்றிணை; 8 : 9. 3. 4 : 18 ג ת. 4. - 195 : 5. 5. 7 : 35 גם. 6. 6-9 : 234 ג ת. 7. 5 in 8 : 9. 8. 5 : 18 : 2-5. 9. 5 * 105 : 7-8.