பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 உதியஞ்சேரல் சினந்து சென்ற ஒலிக்கின்ற இடத்தை யுடைய போர்க்களத்தின் கண்ணே களம் பாடுநருடன் வாச்சியம் வாசிப்போர் விரைவாக ஊதுகின்ற ஆம்பல் என்னும் பண்ணையுடைய இனிய புல்லாங்குழல் பற்றியும்', மெலியாமல் சிறுவர் ஏறுகின்ற பொறை யனது புகழமைந்த கொல்லிமலை பற்றியும் 11, யானையும் நெடிய தேரும் உடைய குட்டுவன் பகைவேந்தரைக் கொன்ற போர்க்களத்தின் கண்ணே அவனது வெற்றிமுரசு அதிர்வது பற்றியும் கூறப்படுகின்றது. கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகிய ஆய் அண்டிரன் தன்னுடைய நாளோலக்கத்தில் இரவலர் பரிசிலாகப் பெறும் அழகமைந்த தேர்களைப் பற்றியும் 18, இரவலர் வரும்பொழுது அவர்கட்குக் கொடுப்பது கருதி ஆய் அண்டிரன் சேர்த்துவைத்த யானைத்திரள் பற்றியும் 14 குறிக்கப்படுகின்றது. நெடுமான் அஞ்சி குளிர்ந்த உள்ளத்தோடு இரவலர் களுக்குத் தேர்களைப் பரிசு கொடுக்க இருக்கின்ற நாளோலக்கம் பற்றிக் குறிக்கப்படுகின்றது. . கொண்கானத்திலுள்ள நன்னனது நல்ல நாட்டிலிருக் கின்ற பொலிவு பொருந்திய ஏழில் மலையைப் பற்றிச் சுட்டப்படுகின்றது. சேரனின் கொல்லிமலையில் தேவ தச்சனால் எழுதப்பட்ட கொல்லிப்பாவையினைப் பற்றிக் கூறப்படுகின்றது."

==

10. நற்றினை; 113; 9.11. ll. H. H. 185 : 6-7, 346 : 8–9. 12. 5 * 395 : 4-5. 13. 5 : 167 : 2-4. 14. .7-8 : 237 ית ל. 15. 6-9 : 381 נב. 16. J. :) 391 : 5-7. 17. 3-10 : 185 נג.