பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219 பாணர் குதிரைகளைப் பரிசிலாகப் பெற்ற செய்தியும் குறிக்கப்படுகின்றது. பழக்கவழக்கங்கள் நற்றிணையில் தமிழர் அக ஒழுக்கம் கூறப்படுகின்ற தேனும் ஆங்காங்கே அவர்தம் பழக்கவழக்கங்களும் இடம் பெறக் காணலாம். தமிழர்கள் அக்காலத்தில் திறம்பட ஒவியம் திட்டக் கற்றிருந்தனர் என்பது ஒவிய எழுது கோலை உவமையாகக் காட்டுவதிலிருந்து உணரலாம். ' கார்த்திசைத் திங்களில் ஒரு திருநாளில் விளக்குகள் ஏற்றி வரிசையாக வைப்பது வழக்கம் என்று விளங்கு கின்றது.99 எருமை மேய்ந்த மலைப்பச்சையின் இலைகள் ஒண்கொடி அணியும் மகளிர் கலன்களை அணிதற்குப் பயன்படும் என்ற பழக்கத்தை உணரலாம். கடலில் பாய்ந்து விளையாட்டு அயர்வர் பெண்கள் என்பது தெரிகின்றது. அவர்கள் கழித்துப்போடும் மலர்களைப் பெற்றம் (பசு) தின்னும். தின்ற பசு இசையையுடைய மாலையில் புலந்திரும்பும்.' பண்டைத் தமிழகத்தில் விழாக்கள் நடைபெற்றதைச் சில பாடல்கள் உணர்த்துகின்றன. சோழன் தலைநக ரான உறையூரின்கண் பங்குனித் திங்களில் உத்திர நாளில் விழா நடைபெறும். சேரனின் வஞ்சியில் கொங்கு நாட்டினர் மணிகளை இடையில் கட்டிக்கொண்டு தெருவில் ஆடும் விழா உள்ளிவிழா எனப்படும். இவ்விழாக்களில் ஆரவாரம் மிகுதியாக இருக்கும்.28 18. நற்றிணை; 185 : 3.4. 19. ,, 118 : 7-8. 20. 15 202 : 9. 21. 12 391 : 5. 22. 3 * 395 : 6-8. 23. jj 234 : 8-9.