பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221 பருவத்தில் இளைய பிணைமானைப் புணர்ந்த கரிய பிடரியினையுடைய கலைமான் உள்ளே வயிரமுற்றிய வேலமரத்தின் தாழ்ந்த கிளையினாற் பல்கிய-காண்போர் கண்ணைக் கவர்ந்து கொள்ளும் வலிபொருந்திய நிழலிலே தங்கி இருக்கும் குளிர்ச்சியற்ற காடு என்றும் 28 காடு. பற்றி நற்றிணையில் வருணிக்கப்படுகின்றன. இளவேனிலைப் பற்றி எழிலொழுக வருணிக்கப்படு கின்றது. ஆற்றங்கரையிலுள்ள மாமரத்தின் அசைகின்ற கிளைகள் தழைத்தமையால் தளிர்மிக்கு அழகு பொருந்திய குளிர்ந்த நறிய சோலைகளில் தன் காதற் சேவலோடு கூடியுறையும் சிவந்த கண்ணையுடைய கரிய குயிற்பேடை ஒன்றனை ஒன்று விரும்பி எதிரெதிர் இருந்து கூவி மகிழும் பூக்கள் நிரம்பிய இளவேனில்?’ என்றும் மாவின் பூங்கொத்து மீதிருந்து குயிலின் சேவலும் பேடையும் எதிரெதிர் அமர்ந்து, 'ஒ, தலைவனும் தலைவியுமாய் அமைந்து புணர்ந்துடையீர், பிரியாதீர், இன்னும் பல படியும் புணருங் கோள்' என்று தம் இனிய குரலால் இசைத்திடும் இன்ப முடைய இளவேனில்89 என்றும் தீட்டப்படுகின்றது. தலைவன் செல்லும் பாலை நில வழியின் வறட்சி பற்றிக் கூறப்படுகின்றது. உலர்ந்த கொடிகள் பின்னிக்கொண்டு. கிடக்கும் முன்பொருந்திய அடியினையுடைய இலவ மரத் தின் விளங்குகின்ற கிளைகளை அசைத்து முறியுமாறு வீசி வெவ்விய காற்று மோதும் மூங்கில்கள் நிறைந்த பகுதியில் விரைந்த செலவினையுடைய பிடியானை தன் கன்றொடு கூடி நின்று வருந்த, நெடுந்துாரம் நீர் சிறிதும் இன்றி வற்றிய நிழலில்லாத அவ்விடங்கள் கடத்தற்கரிய கவர்த்த வழிகளை உடையன எனப்படுகின்றது. 28. நற்றிணை; 256 : 6.11. 29. HI 118 : 1-4, 30. >> 224 : 4-6. 31. 1-6 : 105 תג.