பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 உவமைகள் எதையும் எளிதில் விளங்க வைத்து உள்ளத்தில் அழுந்தப் பதிய வைப்பதற்கு உவமை பயன்படுகின்றது. அதைப்போல இது என்றால் அதில் ஒரு தனி அழகு இருக்கின்றது. நற்றிணையில் வரும் தலைவியின் கண் களுக்கு நல்லதோர் உவமை பொருத்திக் காட்டப்படு இன்றது. தலைவியின் கலங்கிய நிலையில் அழுகையால் பனித்துக் கிடக்கின்றன. அதற்கும், பலவாகிய இதழ்கள் பொருந்திய குவியாது விரிந்திருக்கும் நெய்தற்பூ, நெற் கதிரை அறுக்கும் களமருடைய கூரிய வாள் அரிதலால் நீரில் நனைந்து தண்ணிர் துளித்துத் தோன்றுவதும்." குவளையின் நீர் வடிகின்ற ஒளி பொருந்திய மலர் தோன்றுவதும்? உவமைகளாகக் காட்டப்படுகின்றன. அந்தத் தலைவியின் அழகுக்கு மாந்தை நகர் உவமை காட்டப்படுகின்றது.கே காதலால் கொல்லும் அவளுக்குக் கொல்லிப்பாவை உவமை காட்டப்படுகின்றது. தலைவி வாய்விட்டு அழுது கலங்கிய வருத்தம் ஆம்பல் என்னும் பண்ணையுடைய இனிய புல்லாங்குழல் இசையெடுத்தாற் போல் அமைந்தது எனப்படும். அவள் நெஞ்சின் நடுக்கத் திற்குக் கரையை மோதி ஒடுகின்ற கான்யாற்றின் இடிகரை வேர்கள் எல்லாம் அடைபட்டுத் தோன்றிக் காற்றால் அலையும் மாமரத்தின் அழகிய தளிர் உவமிக்கப்படு கின்றது.37 கள்ளுண்டார்க்கு அக் கள்ளால் உண்டாகும் களிப்பு நிற்குங்காலும் கண்சிவந்து காட்டும் வேறுபாடு 32. நற்றிணை, 195 : 6.8. 33. 55. 391 : 8-10. 34. 5 : 35 : 7, 395 : 9. 35. H. P. 185 * 11. - 36. 15 113 : 11-12. 37. HH 381 : 3-5.