பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 போன்றது காதலால் உடலில் ஏற்படும் மாறுதல் எனப் படுகின்றது.38 நெய்தல் மலர் நெற்போரின்கண் மகளிர்கண்போல மலரும் எனப்படுகின்றது. ஒவியம் எழுதுவோரது ஒள்ளிய செவ்வரக்கின் குழம்பிடைத் தோய்த்த எழுது கோல் போல் தலையிலே துய்யினையுடைய பாதிரி எனப் பொருத்தமாகக் குறிக்கப்படுகின்றது." புல்லிய இதழை யுடைய கோங்கினது மெல்லிதாய் விரிந்த உட்குடைவான பூக்குவியலில் தோன்றும் செம்மீன் என நினையுமாறு மலர்ந்து தோன்றும். காட்டிலே கோங்க மலர்கள் நிரம்பிப் பூத்து அணிசெய்கின்றன. இந்தக் காட்சி கார்த்திகைத் திங்களிலே சீற்றும் ஒளியையுடைய நீண்ட விளக்குகளின் வரிசைபோலத் தோன்றுகின்றதாம்.' வானத்திலே உலகத்தில் வாழும் உயிர்கள் மகிழ்ச்சி யடைவதற்காக மழை பொழியத் தோன்றும் மேகங்கள், ஆய் அண்டிரன் பரிசில் வழங்கச் சேர்த்து வைத்த யானைத் திரள் போன்று விளங்குகின்றன. மழை பெய்வதற்காக மேகங்கள் மேலெழுந்து மயங்கி வருதல் பரிசிலர்க்குத் தேர்களை வாரி வழங்குவதற்காக வள்ளல் திருவோலக் கத்திற்கு வந்து வீற்றிருத்தல் போன்றது. ' கருநிறமான குன்றில் வெண்ணிறமான அருவி ஒன்று தோன்றுகிறது. அந்தக் குன்று பெரிய ஒன்றைக் கொம் 38. நற்றிணை; 35 : 1.1.12. 39. H = 8 : 8. 40. 7 : 118 : 7-8. 41. 3-4 : 48 נג. 42. 11 202 : 9-11. 43. y - 237 : 7-10. 44. - 1 381 : 7-10.