பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 புடைய யானைபோல் தோன்றுகின்றது. கடல் அலைகள் ஒலித்தல், போர்க்களத்தில் முரசு ஒலித்தலைப் போன்று விளங்குகின்றதாம். பெரியோர்கள் தாம் வழிபடும் தெய்வத்தைக் கண்முன்னே தோன்றக்கண்டாற்போலக் களவின்கண் பலவகையில் அலைந்து வருந்திய துயர் தீருமாறு தலைவியின் நல்ல மெல்லிய தோள்களைப் பெறல் உளதாம். 47 மரங்களுடைய நிழலில் தோன்றும் புள்ளிகள் புலியினது புள்ளிகள் போல் விளங்கினவாம். 48 அகப்பொருள் நுட்பம் சங்க இலக்கியத்தில் அகத்துறைப் பகுதியே மிகுதியும். காண்கின்றோம். நற்றிணை ஓர் அகப்பொருள் இலக்கியம். இதில் பொதிந்துள்ள அகப்பொருள் நுட்பங்கள் சுவை மிகுந்தவை. ஒருவரைப் பார்த்ததும் அவருடைய கண்கள்தாம் முதலில் எவரையும் கவரும். தலைவியின் கண் என்றால் சொல்லவும் வேண்டுமா? கண்டோர் நிலைத்த துன்பமுறு தற்கு ஏதுவாகிய அரிபரந்த மதர்த்த குளிர்ந்த கண்கள் என்றும்', பல்கிய பெரிய அழகமைந்த அமர்த்த கண்கள் என்றும்" கூறப்படுகின்றன. பிரிவுக்காலத்தில் அக்கண்கள் கலங்கி அழும் தோற்றம் எவ்வளவு இரங்கத்தக்கதாக இருக்கும். குவளை மலர் போன்ற பெரிய அமர்த்தலை யுடைய குளிர்ச்சியுற்ற கண்கள் என்றும் , நெய்தல்பூ நீரில் 45. நற்றிணை; 18 : 8.10. 46. * * 395 : 4–6. 47. 1-2 : 9 נת. 48. 5 : 391 : 2. 49. 1 : 8 נת. . 50. 2 : 256 נב. 51. * - 391 . 8-10.