பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225 நனைந்து தண்ணிர் துளித்துத் தோன்றுவது போன்று கண்ணிரால் நனைந்து நீர் துளித்து அழுதுநிற்கும் கண்கள் என்றும் 2 கூறப்படுகின்றன. அவளுடைய" துதலும் முலையும் 4 அல்குலும் கூந்தலும் மேனியும்' நன்கு சிறப்பித்துக் கூறப்படுகின்றன. அகப்பொருள் தலைவி எத்துணை மென்மையானவள்? வழிநடந்த வருத்தம் தீர நிழலைக் கண்டால் நெடும் பொழுது அங்கே தங்கியும் மணலைக் கண்டால் சிற்றில் புனைந்து விளையாடியும் மெல்லமெல்லச் செல்வாயாக" என்று அவளிடம் கூறுவதால் அறியலாம். காதல் எவ்வளவு உயர்ந்தது, விழுமியது, சிறந்தது, வலியது என்றும் குறிக்கப்படுகின்றது. கொண்கான நாட்டின்கண் உள்ள நன்னனது நல்ல நாட்டில் இருக்கின்ற பொலிவு பொருந்திய ஏழில் மலையைத் தாம் பெறுவதா யினும் நின்னைவிட்டுப் பிரிபவர் யார் எனத் தலைவன் தலைவியிடம் குறிப்பிடுவதால் உணரலாம்." அகமும் மிக நுட்பமானது. அந் நுட்பத்தை நுட்பமாக விளக்குவன உள்ளுறையும் இறைச்சியும்! இவை இரண்டும் நற்றிணைப் பாடல்களில் ஏற்ற இடங்களில் பொருந்த அமைந்து இன்பம் பயக்கின்றன. பொங்கி எழுகின்ற அலைகளால் அலைத்து ஒதுக்கப்பட்ட நீண்ட மணல் பரந்த கரையில் நிற்கும் நாவல் மரத்தினின்றும் உதிர்ந்த கரிய _ 52. நற்றிணை: 195 : 7.9. 53. H. :) 167 : 11. 54. + 2 9 : 6. 55. 2 : 8 : 2. 56. 5 : 364 : 10-11. 57. 11 8 : 3. . 58. . - * : 9 : 7–9. 59. 391 :.6-10. In 1 சே. செ. இ.15