பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 கணியைக் கண்டு தன் இனத்து வண்டு என்று பிறழக் கருதிச் சூழ்ந்த தும்பியைப் பழமென்றே நினைந்து நண்டொன்று வந்து பற்றிக் கொண்டதனால் வருந்தி அத்தும்பி இசைக்கும் இசையினைக் கேட்டு இரைதேடித் திரியும் நாரை வரக் கண்டு தான் கண்ட நாவற்கனியை அஞ்சிக் கைவிட்டு நீங்கும் நீர்த் துறை"?; இஃது ஒர் அழகான இயற்கை ஓவியம். ஆனால் இதில் உள்ளுறை அமைந்து இன்பந் தோற்றுவிக்கின்றது. நாவற்கனி தலைவியாகவும், தும்பி தோழியாகவும், நண்டு தவறு இழைக்கும் சுற்ற மாகவும், இரைதேடித் திரியும் நாரை தலைவனாகவும் உவமிக்கப்படுகின்றன. கனியைத் தும்பி மொய்த்தல் தலைவியைத் தோழி சார்ந்திருப்பதாகவும், நண்டு கைப் பற்றிக் கொள்ளுதல் சுற்றத்தினர் தலைவியை இற்செறிப்ப தாகவும், நாரை வரக் கண்டு நண்டு கனியை விடுதல் தலைவன் வரவுகண்டு தலைவியின் இற்செறிப்பொழித்து அவனுக்கு மணமுடிப்பதாகவும் காட்டப்படுகின்றன. இது போல் பிற பாடல்களிலும் வருகின்றன.61 - கன்றுடனே இளம்பிடியை அணைத்த நீண்ட கையை யுடைய களிற்றுயானை தேனைத் தொடுகின்ற ஈக்கள் எல்லாம் ஒடுமாறு அவ்வேங்கையின் பொன்போன்ற பூங்கொத்தால் ஆகிய உணவைப் பாதுகாத்து நின்றும் ஊட்டும். இதில் இறைச்சிப்பொருள் அமைந்து நயம் காட்டுகின்றது. வேழம் தலைவனாகவும், இளம்பிடி தலைவியாகவும், கன்று மக்களாகவும் உவமிக்கப்படு கின்றன. கன்றோடு பிடியைத் தழுவிய வேழம் கவளம் ஊட்டுவதைப் போன்று காதலியோடு இல்லறம் நிகழ்த்தி அவளிடத்துப் பிறந்த மக்களுடனே அவளையும் பாது காத்துக் கொள்ளுவேன் எனக் கூறும் காதலன் சிற்று 60. நற்றிணை; 35 : 1.6. ■ 疇 61. 6-8 : 395 ,4-5 : 391 ,195:2-4 כת. 62. HH 2021: 4-6. +.