பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227 குறிக்கப்படுகின்றது. பிற பாடல்களில் பல இடங்களில் இறைச்சிப் பொருள் அமைந்துள்ளன." நோய் செய்து அந்த நோய்க்கும் மருந்தாவாள் என்று திருக்குறள் தலைவியைப் பற்றிக் குறிப்பிடும். காம நோய்க்கு மருந்தெனப்படும் த ைல வி என்கிறது நற்றிணை.68 தலைவி தரும் காமநோய் தாங்கொணாத் துன்பத்தை அளிக்கின்றது தலைவனுக்கு. அவள் தன்னைக் கொலையே செய்கின்றாள் என்று புலம்புகின்றான் தலைவன். தலைவனைப் பார்த்து, நீ யார்? எமக்கு நீ என்ன வேண்டும்? ஆராய்ந்தால் நட்புடையாரைப் போலவும் அல்லை. அயலான் ஆயினை என்று கிளக் கின்றாள் தலைவி. அகப்பொருளில் ஊடல் ஒர் அழகு அன்றோ? தலைவியுடன் வாழும் வாழ்க்கையினும் சிறந்த ஒன்று உண்டோ? தலைவர் பொருள் தேடிச் செல்கின்றாரே? அவளுடைய அழகிய கூந்தலில் அணைந்து துயிலும் இன்பத்தினும் அப்பொருள் பெரிதோ? வாழ்க்கை அவளிடமா? அப்பொருளிடமா? அவளிடம் பெறும் இன்பமே அருமையான பெறற்கு அரிய பெரிய பயன் என்கிறது பாடல்..??

63. நற்றிணை; 48 : 3-6, 105 : 1.3, 105 : 4-5, 113 : 1-3, 167 : 2-4, 167 : 8-9, 185 : 3-4, 185: 8–9, 195 : 5, 318 : 7-9, 384 : 1-4. 64. 9-11 :384 ג ת. *65. + 7. 185 : 12. 66. * . 395 : 1-2. 67. , 337 : 8-9.