பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. குறுந்தொகை எட்டுத் தொகை நூல்களில் குறுந்தொகை நாலடிச் சிற்றெல்லையையும் எட்டிப் பேரெல்லையையும் உடைய நானுாறு அகவற்பாக்களைக் கொண்டதாகும். குறுந் தொகை எட்டுத் தொகை நூல்களில் முதலில் தொகுக்கப் பட்டது என்பர் அறிஞர். இதற்கு, குறுந்தொகையிலுள்ள சொற்றொடர் காரணமாகப் பேர்பெற்ற புலவர்கள் அப் பெயராலேயே பிற தொகை நூல்களில் வழங்கப்பெறு கின்றனர்; ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல் என்னும் மூன்று வகை யாப்புகளால் ஆன எட்டுத்தொகை நூல் களை முறையே செய்யுட்களைத் தொகுக்கத் தொடங்கிய வர்கள் முதலில் ஆசிரியப் பாக்களில் தனியாக உள்ள அகப்பாட்டுகளைத் தொகுத்து அடியளவால் மூன்று பிரிவாக்கி, குறைந்த அளவையுடைய குறுந்தொகையை முதலில் செப்பம் செய்தார்கள் என்பது ஒரு வகையில் இயல்புடையதாகவே தோன்றுகின்றது என்பர் டாக்டர் உ. வே. சாமிநாதைய்யர் அவர்கள். குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துச் செய்யுள் பாரதம் பாடிய பெருந்தேவனாரால் இயற்றப்பட்டது. அது முருகனைப் பற்றிய பாடல். இந்நூலினைத் தொகுப் பித்தார் இன்னார் என்று தெரியவில்லை, பூரிக்கோ என்பவர் ஆதரவால் இந்நூல் தொகுக்கப்பட்டது. இந் நூலை இருநூற்று ஐந்து புலவர்கள் பாடியுள்ளனர். பத்துப்பாடல்களின் ஆசிரியர் பெயர் காணப்படவில்லை. பிற தொகை நூல்களைக் காட்டிலும் பிற்கால உரை யாசிரியர்களால் குறுந்தொகையே மிகுதியாக எடுத்தாளப் 1. குறுந்தொகைப் பதிப்பு:முகவுரை: பக்.10.