பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229 பட்டுள்ளது. நூற்று அறுபத்தைந்து செய்யுட்களே பிற நூல் உரைகளில் மேற்கோளாகக் காட்டப் பெறாதவையாகும். இந்நூல் நல்ல குறுந்தொகை' என்று பாராட்டப்படுகிறது.

இச்செய்யுள்களில் காணப்படுவனவாகிய தலைவன் தலைவியரிடையே காணப்படும் அன்பு முறைகளில் அவர் இல்லறம் நடத்தும் முறை முதலியன உலகியலைச் செம்மைப்படுத்தும் தன்மையின. சங்க காலப் புலவர் பெருமக்களின் கவியாற்றலை அறிந்துகொள்வதற்கு குறுந்தொகை ஒரு சிறந்த கருவி ஆகும். இதன்கண் அகநூற்றைப் போல முதல் கருப்பொருள்களைப் பற்றிய செய்திகள் விரிவாகக் காணப்படவில்லை; திருக்குறளைப் போல அறவே நீக்கப்படவுமில்லை. இலக்கண அமைதி நன்குடையதாகி விரிவும் சுருக்கமும் இன்றி இயற்கைக் காட்சிகளின் எழில் நலங்களையும், அகனைந்திணை யொழுக்கங்களையும், பண்டைக்கால நாகரிகச் சிறப்பை யும், வேறு பல அரிய பொருள்களையும் விளக்கிக் கொண்டு. நிற்பது இக்குறுந்தொகை. எண்பத்தேழு மரஞ்செடி கொடிகளைப் பற்றியும், இருபத்தைந்து வள்ளல்களைப் பற்றியும், ஆறு (6) மலைகளைப் பற்றியும், இரண்டு ஆறு களைப் பற்றியும், ஒன்பது ஊர்களைப் பற்றியும் அவ்வவ் வற்றின் இயல்புகளை நன்றாக உணர்ந்து குறுந்தொகைப் புலவர்கள் வெளிப்படுத்தி உள்ளார்கள். தமிழர்தம் களவு, கற்பு ஆகிய அகத்திணை ஒழுக்கங்களைக் குறுந்தொகை அழகுற விளக்குகிறது. அக்காலத் தமிழ் மக்களின் வழக்கங்கள், வாழ்க்கை நிலை, நாகரிகம், அரசியல் முதலியவைகளை ஒருவாறு அறிந்து கொள்வதற்குக் குறுந்தொகை உதவுகிறது. அறம், பொருள், இன்பம், வீடு பற்றிய நீதிகள் குறுந்தொகையில் அங்கங்கே அமைந்து விளங்குகின்றன. நூற்று எழுபத்து நான்கு உவமைகள் குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளன. தாம் பாடிய பாவடித் தொடரினாலும் உவமையாலும் பெயர் பெற்ற வர்களாகப் பதினெட்டுப் புலவர்கள் பெயர்கள் காணப்படு