பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 கின்றன. அக்கால வரலாற்றுக் குறிப்புகள் குறுந்தொகை யில் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. குறுந்தொகையில் இருபத்து நான்கு பாடல்கள் சேர நாட்டைப் பற்றிய குறிப்பினை நமக்குத் தருகின்றன.” தலைவியின் அழகு கொல்லிக் கண்ணன் என்னும் புலவர் தலைவியின் அழகினை மரந்தை என்னும் நகருக்கு ஒப்பிட்டுள்ளார்.8 சேரமானெந்தை பாடிய பாடலில் தலைவியின் ஒளிவிடும் நெற்றி, மலைப் பக்கத்தில் வளர்ந்துள்ள வெண்கடப்ப மரம் வேனிற் காலத்தே மலர்ந்து மணம் கமழ்வது போன்று நறுமணமுங் கொண்டு திகழ்கிறது என்று குறிப் பிட்டுள்ளார். பாலைபாடிய பெருங்கடுங்கோ, பாலை வழியில் காட்டிடையே தழைத்த வளைந்த கிளைகளை யுடைய வெட்சியினது முறுக்கு அவிழ்ந்த பலவாகிய பேரரும்புகள் மணக்கின்ற கரிய கூந்தல் என்று தலைவியின் கூந்தல் மணத்தினைப் புலப்படுத்தியுள்ளோம். மோசிகீரன் என்னும் புலவரால் தலைவி மேனியின் மணமும் தன்மையும் (குளிர்ச்சி) பொதிய மலையின் வேங்கை, காந்தள் மலர் களின் மணத்தோடும், ஆம்பல் மலரின் குளிர்ச்சியோடும் ஒப்பிட்டுப் பேசப்பட்டுள்ளன. பரணர் தலைவியின் அழகினைக் கண்டோர் நெஞ்சங் கலங்கி மயங்கி வீழ்ந்து உயிர்விடச் செய்யும் இயல்புடைய கொல்லிப் பாவையின் 2. பாடல்கள்: 16, 22, 31, 37, 80, 84, 89, 91,109, 124, 128, 135, 137, 166, 179, 209, 231, 238, 243, 262, 268, 283, 398. 3. குறுந்தொகை; 34: 6-7. 4. 15 22:3-5. 5. Hy 209: 4–7. 6. H. H. 84:3-5.