பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

231 அழகிற்கு உவமை கூறியுள்ளார். குன்றியன் தம் பாடல் ஒன்றில் தலைவியின் நலத்தினைத் தொண்டி' என்னும் கடற்கரை நகரத்து நலத்தோடு ஒப்பிட்டுக் கூறியுள்ளார்." வரலாற்றுக் குறிப்புகள் குறுந்தொகைப் பா ட ல் க ள் ஆங்காங்கே சில வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டுள்ளன. நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் கொண்ட பாடல்கள் ஆயினமையின் நெடிய வரலாற்றுக் குறிப்பு களுக்குக் குறுந்தொகையில் இடமில்லை. குட்டுவனது படைவீரர்கள் பகைவரைக் கொன்று ஆரவாரிக்கின்றனர். அவ் ஆரவார ஒலியினைக் கேட்டு அந் நெய்தல் நிலத்தின் கடலோரத்தே வாழும் வண்டாழ்ங் குருகு என்னும் பறவைக் கூட்டங்கள் அஞ்சி நடுங்கின. இந் நெய்தற் கடற்கரையோரம் குட்டுவனுக்குரிய மரந்தை என்னும் நகரம் இருந்தது. கொடிய போரில் பலவேற் படைகளையுடைய எழினியென்னும் உபகாரி தனக்குரிய நி ைர ைய க் கைக்கொண்ட பகைவரிடத்திலிருந்து ஆநிரையை மீட்டுக் காத்தான்." இவ் எழினியை அதிய மான் அஞ்சி என்று டாக்டர் உ. வே. சாமிநாதையர் சொல்கிறார். இச் செய்தியின் உண்ம்ை அகநானூற்றின் இரண்டு பாடல்களானும் அறியப்படும். மேலும் இச் செய்தி இப்பொழுது கிடைக்கும் தகடுர் யாத்திரைச் செய்யுட்களாலும் வலியுறப் பெறுகின்றது என்பர் டாக்டர் 7. குறுந்தொகை; 89: 4–7. 8. 5 : 238: 4-5. 9. #1 34: 4-7. 10 H. H. 80: 4:7. 11. குறுந்தொகைப் பதிப்பு; பக்: 184. 12. அகநானூறு: 105; 10-15; 372 : 9-11.