பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 உ. வே. சாமிநாதையர் அவர்கள்.13 மோசிகீரன் என்னும் புலவர் ஆய் என்னும் வள்ளல் தோள் வளையையுடையவன் என்றும், அவனுக்குரிய பொதிய மலையில் மேகங்கள் தவழ்ந்து கொண்டிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். * பரணர் தாம் பாடும் பாடல் ஒவ்வொன்றிலும் யாரை யேனும் புகழாமலும் அக்காலத்து நிகழ்ந்த கதை எதை யேனும் அமையாமலும் இரார்' என்று அறிஞர் குறிப் பிடுவர். இவர், பெரிய அணிகலத்தை அணிந்த சேரனுக் குரியது அச்சந்தருதல் மிக்க கொல்லி மலை என்றும், அம்மலையிலுள்ள கரிய கண்களையுடைய தெய்வம், அம் மலையின் மேற்குப் பக்கத்தில் நல்ல இயலையுடைய பாவையை எழுதியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். ' ஒளவையார் அதியமான் அஞ்சியின் ஈகைச் சிறப்பினை ஒரு பாடலில் இனிதுறக் கிளத்தியுள்ளார். காலமும் இடமும் பெறுவார் தகுதியும் நோக்கி யொழியாமல் எப்பொழுதும் கொடுக்கும்-மேகம் போன்று கைம்மாறு கருதாத வண்மையையுடைய கையினையும், விரைந்த செலவையுடைய ஆண் யானைகளையும், உயர்ந்த தேர் களையும் உடையவன் அதியமான் அஞ்சி என்று அஞ்சியின் கொடைப் பண்பினையும் படைப்பெருமையினையும் பாராட்டியுள்ளார். புலவர் குன்றியன், தலைவியின் அழகிற்குத் தொண்டி நகரை உவமையாகக் கூறியிருக்க, பரணம் அத்தொண்டி மேல் கடற்கரையில் அமைந்த பட்டினம் என்றும், அத்தொண்டி திண்மையாகிய தேரை யுடைய சேரனுக்கு உரிமையுடையதென்றும் குறிப்பிட்டுள் ளார். கூடலூர் கிழார் என்னும் புலவர், மரந்தை 13. குறுந்தொகைப் பதிப்பு; பக்: 184. 14. குறுந்தொகை; 84: 3-5. 15. 5-4 :89 .. ا و د. 16. . . . . . . 91: 5-8. 17. , 128: 1-3.