பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233 கடற்கரைப் பட்டினம் எனக் குறிப்பிடுமுகத்தான், அக் கடற்றுறைப் பட்டினத்தில் நீர்த்துறையில் அலைகள் அடித்து வந்த மீன்களை ஒதுக்கிவிட்டு, வெள்ளிய சிறகை யுடைய நாரையின் கூட்டங்கள் தாமே முயன்று அயிரை மீனைப் பெற்று உண்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.18 இவ்வாறு எட்டுப்பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. மகளிர் விளையாட்டு சில பாடல்களில் மகளிரின் பொழுதுபோக்கு விளை யாட்டுகள் சுட்டப்பட்டுள்ளன. மகளிர் துணங்கைக் கூத்தினை அயர்வர் என்ற செய்தி ஆதிமந்தியார் பாடலால் அறியப்படுகின்றது. மகளிர் பச்சை அவலை இடித்த வயிரம் பொருந்திய உலக்கையை அழகிய கதிரையுடைய நெற் பயிரையுடைய வயலினது வரப்பாகிய அணையிலே படுக்க வைத்துவிட்டு ஒளிவிடும் வளையையுடைய பெண்கள் விளையாடுகின்றனர் என்று குன்றியன் என்னும் புலவர் குறிப்பிட்டுள்ளார்.20 நம்பி குட்டுவன் என்னும் புலவர், ஒள்ளிய வளையையுடைய பெண்கள், மானின் குளம்பைப் போன்ற பிளவையுடைய இலைகளையுடைய அரும்பினது, குதிரைக் கழுத்திலிடும் மாலையின் கண் உள்ள மணியைப் போன்ற ஒள்ளிய பூவை வலிய அலர்த்தி ளிைட்டு விளையாடத் தொடங்குகின்றனர் என்று குறிப் பிட்டுள்ளனர். ஒளவையார், ஆம்பல் மலரின் புறவித மொடித்த முழுப் பூவைச் செருகி, புதுவெள்ளம் வரப் பெற்ற நீர்த்துறையை விரும்பிப் புனல் விளையாட்டிற்குப் பரத்தையர் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.22 18. குறுந்தொகை; 166 : 1.3. 19. 15 31. . . 20. + 5. 238 : 1-3. 21. 1-3 : 243 תות. 22. 80 : 1-3. 5 :