பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234. இவ்வாறு மகளிர் விளையாட்டு நிகழ்ச்சிகள் குறுந் தொகையில் கூறப்பட்டுள்ளன. IIIII 500557 வற்றிய பாலையிலும் வற்றாத அன்பினைப் புலவர் நயமுற எடுத்துரைப்பர். பாலை நிலத்தில் பெண் யானை யினது பசியை நீக்குதற்பொருட்டுப் பெரிய துதிக்கையை யுடைய ஆண் யானை மெல்லிய கிளைகளையுடைய யாமரத்தின் பட்டையை உரித்து அதன் நீரைப் பருகச் செய்யும் அன்பின என்று புலவர் பாலைபாடிய பெருங் கடுங்கோ பாடியுள்ளார்.23 உயர்ந்த மலைப்பக்கத்தில் இனிய தேனிறாலைக் கிழித்த பசிய மூங்கில்களின் குருத்தைத் தின்ற ஆழ்ந்த வாயையுடைய பேதைமையையுடைய யானையினைக் குட்டுவன் கண்ணன் என்னும் சேரநாட்டுப் புலவர் தம் பாடலொன்றில் குறிப்பிட்டுள்ளார்.24 பாலை கடத்தற்கரிய பாலை வழியின் வெம்மையும் பிறவும் புலவர் பாடல்களில் ஆங்காங்கு இடம் பெற்றுள்ளன. விண்டொட நி வ ந் த விலங்குமலைக் கவான்: வானத்தைத் தொடும்படி உயர்ந்த குறுக்கிட்ட மலையின் அடிவாரம்' என்று பாலை நிலத்து மலை வருணிக்கப் பட்டுள்ளது. அறச் சிந்தனையாளர் வழிப் போவாரது உயிரைத் தாங்கற்குரிய அறத்தைச் செய்யும் நெல்லி மரத்தினைப் பாலை நிலத்து வழியோரமாக நட்டுள்ளனர். அந்நெல்லியின் அழகிய பசிய காய்கள் வலிமையுடைய புலிக் குட்டிகள் கொள்ளற்குரிய இடத்தில் உதிர்ந்து 23. குறுந்தொகை; 37 : 2.4, 24. * : 179 : 4–7. 25. † : 262 : 6.