பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235. உருளுகின்றன. அவ்விடத்தே கடத்தற்கரிய மலையுளது. இவற்றைக் கடந்து தலைவன் பொருள் தேடச் செல்கிறான் என்று பாலைபாடிய பெருங்கடுங்கோ குறிப்பிட்டுள்ளார்." பிறிதொரு பாடவில் அப்புலவர், எப்பொழுதும் கூற்று வனைப் போன்ற கொலைத் தொழிலைச் செய்யும் வேலையுடைய மறச்சாதியார் வழியினிடத்தே தங்கி, வழிப்போவாரைக் கொல்கின்றனர் என்றும், அப்புலாலைப் பருந்துகள் ஆர்வத்தோடு எதிர்நோக்கி நிற்கின்றன என்றும், அப்பாலை வழியில் நீரே இல்லையென்றும் பாலையின் கொடுமையினை நெஞ்சுருகும் வண்ணம் குறிப்பிட்டுள்ளார்.27 உவமைகள் உவமை நயங்கெழுமிய பாடல்கள் பத்து குறுந்: தொகையில் இடம் பெற்று உள்ளன.28 == அரும்பின் இலை, மானின் குளம்பைப் போன்று பிளந்துள்ளதாக நம்பி குட்டுவன் என்னும் புலவர் குறிப் பிட்டுள்ளார். சங்கப் புலவர்கள் இயற்கைப் பொருள் களைக் கூர்ந்து நோக்கி (Keen observation) ப் பாட்டோ வியம் தீட்டுவதில் வல்லவர் என்பது இதனால் அறியப் படும். பாலை பாடிய பெருங்கடுங்கோ, பெரிய ஆண் யானையினது அடிச்சுவடு, கரும்பு நட்ட பாத்தியைப் போன்று அகன்றது என்ற குறிப்பைத் தந்துள்ளார்.39 இவரே பிறிதொரு பாடலில் மகளிர் கண்ணிற்குக் கயல் 26. குறுந்தொகை: 209 : 1.4. 27. : I 283 : 5-8. 28. 3 16, 80, 89, 91, 128, 243, 262, 283, 398. 29. 244: 1-2. 30. 7-8 : 262 ג ת.