பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 மீனை உவமையாக்கிக் கூறியுள்ளார். பரணர் தலைவி யினைக் கொல்லிக் குடவரையில் எழுதப்பட்ட பாவை யோடு ஒப்பிட்டுள்ளார்.82 நல்லறிவினை இழக்கச் செய்யும் காமத்தினைப் பாலை பாடிய பெருங்கடுங்கோ வில்லிலிருந்து எய்யப்பட்ட அம்புபோல் நெடுந்துாரத்தில் விழுந்து அழிவதனோடு ஒப்பிட்டுள்ளார். மேலும் அவர் தலைவியைக் கண்டும் காணாது செல்லும் தலைவன் செயல் அயலாருடைய சுடுகாட்டை வெறுத்துக் காணாது செல்லும் ஒருவர் செயலோடும் உவமித்துள்ளார்.4 பாலை வழியில் ஆறலைகள்வர் இரும்பினாற் செய்யப் பட்ட தம் அம்பைச் செப்பஞ் செய்யும்பொருட்டுத் தம் நக நுனியிலே புரட்டுதலால் உண்டாகிய ஒலி, சிவந்த காலையுடைய ஆண் பல்லி தன் துணையாகிய பெண் பல்லியை அழைக்கும் ஒசையுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.கி. பாலை பாடிய பெருங்கடுங்கோ காட்டும் உவமை இது. எழினி தன் ஆநிரையைத் தன் பகைவரிடமிருந்து காப்பது போலத் தலைவி தலைவனைத் தன் உறவினர் உதவி யுடன் தன்னோடு தலைவன் பொய்கைக் கரைக்கு வருவதினின்றும் தடுப்பாளாக என்று பரத்தையொருத்தி பகர்வதாக உவமை நயங்கெழும் ஒளவையார் தம் பாடலொன்றில் குறிப்பிட்டுள்ளார். நெடுந்தேரினை யுடைய அஞ்சி போர் மேற்கொண்டுள்ள போர்முனைக்கு அருகில் வாழும் மக்கள் அமைதியுடன் உறங்கும் நாட்கள் சிலவேயாகுதல் போலத் தலைவன்பாற் சென்ற நெஞ்சினை 31. குறுந்தொகை; 398 : 3. 32. : 5 89 : 4–7. 33. ,, . 231 : 4-6. 34. 1-4 : 16 נג. 35. 7 : 80 : 4–7. 36. 5 : 91 : 5-8.