பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237 யுடைய தலைவி உறங்கும் நாளும் சிலவேயாகும் என்று பிறிதொரு பாடலில் ஒளவையார் உவமை நயம் காட்டி யுள் Grrntrf .37 பாலை வழியில் ஆறு பார்த்து அலைக்கும் கொலை மறவராம் மறச் சாதியினரின் தொழிலைக் கூற்றத்தின் செயலோடு ஒப்பிட்டுப் பாடியுள்ளார் பாலை பாடுதலில் வல்ல பாலை பாடிய பெருங்கடுங்கோ. 38 கீழ்க்கடல் அலைக்கு அருகிலுள்ளதாகிய-முதுமை யால் சிறகுகள் நீங்கப் பெற்ற நாரை, சேரனது மேல் கடற்கரையிலமைந்த தொண்டி யென்னும் பட்டினத்தில் கடற்துறையின் முன்னுள்ள அயிரை மீனைப் பெறும் பொருட்டுத் தலையை மேலே எடுத்தாற்போல, நெடுந் துாரத்திலுள்ளவளும் பெறற்கரியவளுமாகிய தலைவியைத் தலைவன் அடைய நினைக்கின்றான் என்று பரணர் தம் பாடலொன்றில் உவமை கூறியுள்ளார்.30 உயரிய குறிக்கோள்கள் ஆடவர்க்குத் தாம் மேற்கொண்ட தொழிலே உயிரென்றும், மகளிர்க்கு அவ்வாடவரே உயிரென்றும் அந்நாளில் கருதப்பட்டன. தலைவன் பொருள்வயிற் பிரிய நேரும்போது அப்பிரிவினை எண்ணும் தலைவி, தலைவனைப் பிரிந்த தலைவியர்க்கு இனிய வீடும் இன்னாமை தரும் என்று குறிப்பிடுகின்றாள்.49 தலைவியை விட்டு அவள் புலப்பப் பிரியும் நிலை தனக்கேற்படுமானால் இரவலர் யாசிக்க வாராத நாட்களாக அமைவதாக என்று தலைவன் குறிப்பிடுவதாக ஒரு பாடல் வந்துள்ளது" . இதனால் கொடைப் பண்பும் நெஞ்சும் வாய்ந்த தமிழர் அறச் சிந்தை தெரிய வருகின்றது. முன்னோரால் சேமித்து 37. குறுந்தொகை; 283 : 5. 38. 3 * 128. : 40. * > 135: 1-2. 41. > 7. 337. . . . .