பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 வைக்கப்பட்ட பொருளை அழிப்போர் பிறரால் செல்வ ரென்று கருதப்படமாட்டார். தாமாக ஈட்டிய பொருளை இல்லாதார் முன்னோர் ஈட்டிய பொருளின் பயனைத் துய்த்து வாழ்தல் இரத்தலைக் காட்டிலும் இழிவுடையது என எண்ணினார்கள். இத்தகு சிறந்த குறிக்கோள்களைப் பாலை பாடிய பெருங்கடுங்கோ தம் பாடலில் குறிப்பிட் டுள்ளார். பழக்கவழக்கங்கள் தலைவனைப் பிரிந்து தலைவியர் தனியே வீட்டில் உறைவதை இனிமையற்றதாகக் கொண்டனர் என்று பாலை பாடிய பெருங்கடுங்கோ குறிப்பிட்டுள்ளார். இக் கருத்தையே கம்பர் இராமன் சீதையை விட்டுக் காடு செல்லத் துணிந்தபோது உன் பிரிவைக் காட்டிலும் காடு வருத்துமோ எனக் குறிப்பிட்டுள்ளார். மகளிர் மாலை யில் தம் கையால் நெய்யை வார்த்து விளக்கை ஏற்று கின்றனர். பெறுதற்கரிய தலைவர் மாலைக் காலத்தில் வர விருந்தயர்ந்து மகிழ்கின்றனர். தலைவன் வேட்டை மேற் செல்லும்போது தன்னுடன் நாயையும் அழைத்துச் சென்று காட்டில் கடமா என்னும் ஒருவகை விலங்கை அலைத்து வேட்டையாடுவான். உப்பு வாணிகர்கள் கூட்டங் கூட்டமாக வாணிகஞ் செய்யப் புறப்படுவர். 8 அகப்பொருள் நுட்பம் குறுந்தொகை அகப்பொருள்நயம் கெழுமிய பாடல்கள் .பல நிறைந்தது. ஈண்டு ஒரு சில காண்போம்: 42. குறுந்தொகை; 124 : 2-4. 43. கம்பராமாயணம்; அயோத்தியா: நகர் நீங்கு o படலம், 226. 44. குறுந்தொகை: 398 : 2.0. 45. 7 5. 179 : 1-3. 46. - 5 124 : 1-2.