பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(239 தலைவன் பிரிந்தால் தலைவி கண்களில் நீர் நிறைந்து நெகிழ்ச்சியடைவாள்.கா கள்ளி மரங்கள் அடர்ந்த காட்டைக் கடந்து சென்ற தலைவன் தன்னை ஒருஞான்று எண்ணிப் பார்க்கமாட்டானா என்று தலைவி துயருறு வாள்.48 தலைவியைத் தலைவன் மணம் செய்யாது தாழ்த்தவிடத்து ஊரில் அலர் எழும். அவன் வரைவொடு புகுந்த வழி அலர் ஒழிந்து ஊரார் அவன் மணம் செய்து கொள்ளும் இனிய செய்தியினைக் கேட்டு இன்புறுவர்.' தலைவன் தலைவியைப் பிரியேன் என்று சூளுரைப் பான். ஒரு ஞான்று பிரிந்தபொழுது தலைவி, தொண்டி நகர அழகு போன்ற நீ நுகர்ந்த என் அழகுச் செவ்வி யினைத் திருப்பித் தந்துவிட்டு, நீ என்பால் முதற்கண் செய்த சூளினை - சபதத்தினைத் (பிரியேன் - பிரியின் தரியேன்) திரும்பப் பெற்றுச் செல்வாயாக’ என்பாள்.'" தலைவன் தலைவியை விட்டு நீங்கிச் செல்லும் காட்டு வழியில் ஆண் யானை தன் பெண் யானையின் பசியை நீக்கும் பொருட்டு யாமரத்தின் பட்டைகளை ஒடிக்கும் அன்புக் காட்சியினைக் காண்பர் என்று நுட்பமாகக் குறிப்பிட்டுத் தலைவனும் தலைவிபால் அன்பு பெரிதும் உடையவன் என்றும், ஆதலின் நல்குவன் என்றும் குறிப்பிடு கின்றாள். தலைவி தான் களவொழுக்கத்தில் ஈடுபட்ட காலையில் செவிலித்தாய் முயங்க நேரிட்டால் பெரிதும் வியர்த்தேன்' என்று கூறித் தன் வெறுப்பைப் புலப்படுத்து வாள். தலைவன் பிரிவால் தலைவியின் துதல் 48. + 7. 16 : 1-5. 49. In 1 34 : 1-3. 50. .5- : 238 כי. 51. Ho I. 37. - 52. - 84 : 1-2.