பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 கவினிழந்த செயலை நம்பி குட்டுவன் ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளார்.3 இரவில் உறக்கம் வாராத தலைவி, நெய்தல் நிலத் தலைவனை யான் இதுபோது நினைக்க வில்லை; எனவே என் கண்கள் படிந்து உறங்குவதாக என்று நயமாகக் குறிப்பிடுவள். தலைவனது வரவினால் இன்பம் உண்டாயினும் வரும் வழியில் நிகழும் ஏதம் நினைந்து அச்சமும், அவன் வாராமையின் அவனைக் காணாத் துன்பமும் உண்டாதலின் தலைவி பிரிந்து செல்கின்றிரோ எனத் தலைவனிடம் செப்பும் ஆற்றலும் இழந்து, மீண்டும் வருவீரோ என்று கேட்டலையும் செய்யாது நிற்கும் இக்கட்டான நிலைமையினைக் கருவூர்ச் சேரமான் சாத்தனார் என்னும் புலவர் குறிப்பிட்டு, தலைவியுடன் இடையீடின்றி உடனுறை வதற்கு விரைந்து வரைந்து கொண்டு வாழும் இல்லற நிலையே தக்கது என்ற நுட்பக் கருத்தையும் உள்ளடக்கி ஒரு பாடலைத் தந்துள்ளார்.: இவ்வாறு குறுந்தொகைப் பாடல்களில் அகப்பொருட் நுட்பங்கள் பல அமைந்துள்ளன. அப்பாடல்கள் தமிழரின் அகவாழ்க்கையின் சிறப்பினை அங்கை நெல்லிக்கனியெனக் காட்டி நிற்கின்றன. 53. குறுந்தொகை; 109 : 2.4. 54. 7 : 243 : 4-5. 55. 11 268.