பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 கட்சேய் மாந்தரஞ் சேரவிரும் பொறையார் என்றும், நூலிறுதியில் உள்ள பழங்குறிப்பினால் தெரியவருகின்றது. யாய் வேட்டவை

  • காவல் பொருட்டு அரசன் வாழ்க; விருந்தாற்றுதற் பொருட்டு நெல்பல பொலிக; இரவலர்க்கு ஈதற் பொருட்டுப் பொன் மிகப் பொலிக என்றும், வயல்கள் வளங்கொண்டு விளைவதாகுக; நாள்தோறும் இரவலர் வந்து பொருள் பெறுவாராக' என்றும், ஆநிரைகள் பால் வளம் சுரப்பதாக, எருமைகள் பல மிகுவதாகுக: ' என்றும், பகைவர்கள் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறு உண்பாராகுக; பார்ப்பார் மறை ஒதுவாராகுக: ' என்றும், பசி இல்லை ஆகுக'; நோய் நெடிது நீங்குக: ' என்றும் வேந்தன் பகைமை ஒழிக, அவன் பல்லாண்டுகள் வாழ்க" என்றும், அறச் செயல்கள் மிக ஓங்குக: அறத்தின் நீங்கிய பாவம் முற்றவும் கெடுக' என்றும், *அரசன் முறையினைச் செய்க; களவு முதலிய குற்றங்கள் நிகழாதொழிக' என்றும், நன்று மிகவும் பெருகுக; தீமை சிறிதும் இல்லையாகுக' என்றும், மழை தப்பாது பொழிக; வளங்கள் நிறைய வாய்ப்பதாகுக' என்றும் தாய் விரும்பி வேண்டினாள்.'

உள்ளுறை உவமம் வெளிப்படையானன்றிக் குறிப்பாற் பொருளைப் புலப்படுத்தும் உவமை, உள்ளுறை உவமம் எனப்படும். இவ்வுள்ளுறை கருப்பொருளில் தெய்வம் ஒழிந்த பொருளை இடமாகக் கொண்டுவரும் என்று தொல்காப்பியனார் குறிப்பிட்டுள்ளார்.” 1. ஐங்குறு நூறு; வேட்கைப் பத்து: 1. 10. 2. தொல், அகத்திணை இயல் : 48 உள்ளுறுத்து இதனொடு ஒத்துப்பொருள் முடிகென உள்ளு ளுறுத்து உரைப்பதே உள்ளுறை உவமம். 3. தொல்; அகத்திணை இயல்: 47.